உன்னைப்பிரிந்து நான்
காற்றில் உன் நினைவலை தேடும் கைபேசியாய் நான்..
என் நிலை அறிந்தும்
எட்டாத அலைக்குறிப்பாய் நீ.....
என்னை உணர்கையில்
உன் தேடலுக்கு பதிலாவேனா?
என் வானில் என்றும் மறையாத
வானவில்லாய் இருக்கும்
உன் நினைவுக்குவியலோடு
காத்திருப்பேனா?அல்லது
உன் சுவாசத்தில் கலந்து
காணாமல் கரைந்திருப்பேனோ?