வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் நிலை

காலை கதிரவன் உதிக்கும் முன்
கண் முழிப்பு......
கைகளிலும் கால்களிலும்
தொற்றிக்கொள்கிறது படபடப்பு ......
பாதி உண்டும் உண்ணாமலும்
வேலைக்கு செல்கிறோம்
இது எங்களின் தினதவிப்பு......
பணியில் தவறு இழைத்தால்
தகாத வார்த்தைகளால் திட்டுவதோ
உயர் அதிகாரிகளுக்கே ஓர் பாணியிலான கொழுப்பு.....
அதை காதில் கேட்காதது போல்
நடிப்பதுதான் எங்களின் நடிப்பு.....
இருந்தும் இழந்தோம் ரோஷம் இழப்பு.....
உச்சி வெயிலில் உடலில் உயிர் ஒன்றுடன்
ஊக்கமிலந்து தவிக்கிறோம் அது வெறுப்பு.....
மாலை ஆன உடன்
முகத்தில் பூக்கிறது சிறு சிரிப்பு......
மிளிரும் நிலா வந்தவுடன்
கண்கள் தானாக தாழ் போட்டு கொள்வதோ
அன்னாள் இரவுநேர அடைப்பு.......
மீண்டும் மருநாள் காலை முதல் தொடர்கிறது
இதே மானங்கெட்ட பொளப்பு......!

எழுதியவர் : சிவபார்வதி (29-May-18, 9:59 am)
சேர்த்தது : சிவபார்வதி
பார்வை : 95

மேலே