காதலில் கிளிகள்
இரண்டு கிளிகள் தென்னங் கீற்றினில்
உட்கார்ந்து உரசி உரசி
பேசுகின்ற வார்த்தைகள் காற்றுவாக்கில்
கவிஞன் காதில் கொச்சைத் தமிழில்
கேட்கின்றது,
உன்னை விட அழகில் உயர்ந்த
பச்சைக் கிளி வேறு எங்கும் பார்க்கவில்லை
ம் ம் பொய்யிலும் புழுகிலும் உன்னை விட
உயர்ந்த கவிஞனும் உலகில் இல்லை
நாம் பேசுவது உண்மைக் கவிஞன்
காதில் கேட்டுவிட்டால்
நம்மைப் பொரிந்து தள்ளிடுவான்
வன் தமிழில் வசைபாடி,
மென்மையான தமிழில் பேசும் நமக்கு
வன் தமிழ் எதற்கு /
வம்பு தும்புவேண்டாம்
வசைப் பாட்டும் வேண்டாம்
கவிஞன் கற்பனையில் மிதந்துவர
சிறகடிக்கும் கருவியென
வளம் பார்த்து வலம் வருவோம்
நாம் இருவரல்ல ஒருவராய் ஒற்றுமையில் ,