தனிமையில் ஒரு நாள்

அங்கும் இங்கும் உறவுகள்
சுற்றி திரியும் வீட்டில்
தனிமையில் ஒரு நாள்........
யாருமில்லா இடத்தில்
யாரோ என்னை அழைக்கிறார்கள்..
ஏற்கனவே கேட்ட சத்தங்கள்
கூட மீண்டும் புதிதாய் ஒலிக்கிறது.....
தட்டாத கதவுகள் கூட தட்டுகிறது..
என் காலடி ஓசைக்கு இணையாய்
இன்னொரு ஓசை....
என் நிழல்களின் காலடி ஓசையாக இருக்குமோ .!
ஒரு கண்ணாமூச்சி யாருமில்லாமல்
யாராவது ஒளிந்திருப்பார்களோ என்று....
பேசாமல் ஒரு குரல் பேசி மெல்ல
தூக்கத்தில் எழுப்பி செல்கிறது......
பார்த்த பேய் படமெல்லாம் நினைவுக்கு வர
நிழல் கூட பேயாய் பயமுறுத்துகிறது.......
இத்தனையும் சுற்றி நடக்க
குறைந்தபாடில்லை
எனக்கும் என் கண்ணாடிக்கும் இடையேயான
சில ஒத்திகைகளும் ...
சில அரங்கேற்றங்களும்.....

எழுதியவர் : ரேஷ்மா (1-Jun-18, 2:13 pm)
பார்வை : 2845

மேலே