பாலகுமாரன் எழுத்து

யெளவன சிருங்கார சோபிதங்களில்
மண்டியிட்டுக் கிடந்தவன் நீ.

காதலின் அத்தனை கதவுகளையும்
திறந்து விட்டவன்.

வலி வேதனைகளில்
கால் பிடித்துவிட்டது உன் பெண்மை.

வாழ்வின் பள்ளத்தாக்குகளில்
செங்குத்தாய் ஏறின காமப்பெருமூச்சுகள்.

பல்வேறு வாழ்க்கைப் பாடுகளிலும்
ஒளி பாய்ச்சியது காதல்.

மோகலாகிரியில் தழுவிக் கிடந்ததை
மொழி லாகவமாய் தூக்கிப் பிடித்தது.

சருகுகளைப் பேச வருகையில்
அதற்கு முன்னான பூக்களைப் பேசினாய்.

சாலை வளைவு நெளிவுகளில்
பயணித்த வாகனம்போல்
உன் மன ஓட்டங்களின்
வெளிப்பாடாயின உன் எழுத்துக்கள்.

எழுத்தில் கரைந்தும் நிறைந்தும்
மறைந்தும் வாழ்கிறாய்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (2-Jun-18, 2:41 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 61

மேலே