அவளும், நானும்

தமிழுக்கு கவிதை
கவிதைக்கு தமிழல்ல

அவளழகில் நான்
அவளுக்கு நான்
அவளழகுக்கு
எனக்காக அவளல்ல
அவளுக்கு நான் -அது
என் பாக்கியம்

வானத்தில் நிலவு
நிலவுக்கல்ல வானம்
வானத்திற்கு நிலவு
அவள் வானம்
நான் நிலவு
அவள் இதயம்
அதில் துடிப்பு நான்
குயில் நான்
அதன் இசையாய் அவள்

உடல் நான்
உயிர் அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jun-18, 7:49 am)
பார்வை : 239

சிறந்த கவிதைகள்

மேலே