நேஷம்

புத்தாண்டினை ஒட்டிய
ஒரு புதிய நாளில்...
திருப்பாவை திருவெம்பாவை
பாடும் மார்கழி மாதத்து
மகிழ்ச்சி நிறை நாளில்...
பிறந்தநாள் கொண்டாடும்
அழகுப்பாவை அறிவுப்பாவை
நேஷிகா... உனக்கு அன்பு
மாமா அத்தையின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

தைமகளும் வரவேற்று
வழிமேல் விழிவைத்துக்
காத்திருக்கிறாள்
முத்தையா செட்டியார் வீட்டுத்
திருமகளை வாழ்த்துவதற்கு...

நேஷிகா நீ நேஷம் மிகுந்தவள்...
உந்தன் புன்னகை நம்
குடும்பத்தின் பொன் நகை...
வைரங்களும் தோற்று விடும்
உன் அன்பான சிரிப்பில்...
உன் கள்ளமில்லா
அன்பில் இருக்கிறது
நம் குடும்ப்பத்தின்
புவியீர்ப்பு விசை...
சப்தஸ்வரங்கள் நர்த்தனமிடும்
உனது கனிவான பேச்சில்...

கல்லூரிக் காலத்தில்
பயணிக்கும் பழனி செல்வி
வீட்டுப் பூங்காவனமே!
எல்லா காலங்களும்
உன் வசமாகட்டும்.. அதில்
வசந்தம் பூக்களாய்ப் பூக்கட்டும்...
அனைத்து வளங்களும் பெற்று
அற்புதமாக வாழ்க நூறாண்டு...
😀👍👆👏🌷😳🌹🍰🎂

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (4-Jun-18, 7:24 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 395

மேலே