ஏக்கம்
காந்த கண்கள் கொண்டவளே
ஒருமுறை உன்னை பார்த்தேன்
பலமுறை பார்க்க வைத்தாய்....
எதிர் வீட்டு இளவரசியே
உன் கதவுகள் திறக்கப்பட
என் சன்னல்கள் ஓரம் என்
விழிகள் உன்னை தேடி
தவிக்க வைத்தாய்......
மாடி மீது ஏறிய மாட புறாவே
கொஞ்சம் என்னை பாரு
உனக்காக தான் காத்திருக்கிறேன்
என நீ அறிவாய்......