பட்டாம்பூச்சி

வண்ண நிறங்களுடன் வட்டமடிக்கிறாய்
உன் மெல்லிய மேனியை தொட்டு பார்க்க நினைத்தேன் - ஆனால்
பக்கத்தில் நான் வந்தவுடனே பட்டென்று பறந்துவிட்டாய்
அழகிய பூக்களில் தான் நீ அமர்வாய் என்றால்
நான் இப்பொழுதே பூக்களாய் பூக்கிறேன்
அப்பொழுதாவது என்னிடத்தில் வந்து அமரு
ஒருமுறையேனும் உன்னை ரசிக்கிறேன்
எதையோ தேடி அலைந்து கொண்டேயிருக்கும் வண்ணத்து பூச்சியே
உனக்கு தித்திக்கும் தேனை நான் தருகிறேன்
ஒருமுறையாவது உட்கொண்டு போ
ஆசைப்பட்ட இடமெல்லாம் பறந்துசெல்லும் பட்டாம்பூச்சியே
நான் உன் மீது ஆசைப்படுகிறேன்
ஒருநாளாகிலும் என்னிடம் உறவுகொள்ள வருவாயா
உன்னை தினமும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் !!!

எழுதியவர் : M Chermalatha (6-Jun-18, 5:20 pm)
சேர்த்தது : M Chermalatha
Tanglish : pattaampoochi
பார்வை : 381

மேலே