355 இடர்செய்வான் துன்ப இடையினில் வருந்துவான் - பிறர்க்குத் தீங்கு செய்யாமை 3

கலி விருத்தம்

உரவுநீர்க் கருங்கட லுடுத்த பார்மிசைப்
பரர்வருந் திடவிடர் பண்ணு வோன்றனை
நரரெலாம் பகைசெய்வர் நண்ணு மாயிரம்
அரவுசூழ் கின்றவோர் தேரை யாவனே. 3

- பிறர்க்குத் தீங்கு செய்யாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மிக்க நீரையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்தில் பிறர் வருந்தும்படி துன்பம் செய்பவனை மக்கள் எல்லாரும் பகைப்பார்கள்.

அவனும் நெருங்கும் ஆயிரம் பாம்பின் மத்தியில் அகப்பட்ட தேரை போன்று வருந்துவான்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

உரவுநீர் - கடல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jun-18, 3:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே