356 கெடுவான் கேடு நினைப்பான் - பிறர்க்குத் தீங்கு செய்யாமை 4

கலி விருத்தம்

கயலிற் பாய்சிரல் கால்சிக்கிக் கொண்டெழ
வயமிலா துயிர்மாய் கின்ற தன்மைபோல்
அயல வர்க்கழி வாகவோ ரந்தரஞ்
செயநி னைத்தவர்க் கேவந்து சேருமே. 4

- பிறர்க்குத் தீங்கு செய்யாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”கெண்டை மீனைப் பிடிக்கப் பாய்ந்த மீன்கொத்திப் பறவை சேற்றில் கால் சிக்கி எழ வலிமையில்லாது உயிர் மாள்வது போல, பிறர் அழிந்து போகும்படி ஒரு தீமை செய்ய நினைத்தவர்க்கே அத் தீமை வந்து சேரும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

கயல் - கெண்டைமீன். சிரல் - மீன்கொத்தி, சிச்சிலி. வயம் - வலிமை. ரந்தரம் - தீமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jun-18, 3:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே