காதல்

நெஞ்சினிலே நெஞ்சினிலே
எந்தன் நெஞ்சினிலே -வந்து
நிற்குதடி உந்தன் மேனி
இது என்ன நான் காண்பது
கனவா நிஜமா ..............

இன்னும் சொல்கிறேன் அதையும்
நீ கேட்டுவிடு என்னவளே
அச்சம்,நாணம் என்ற நான்கும்
தேங்கி நிற்குதடி உந்தன்
விழிகளில் மானே , நீயும்
அந்த மான்போல் என்னைக்
கண்டு அஞ்சினால் காதல்
தோன்றுமா நெஞ்சிலே தங்கமே,
அதனால் அஞ்சிடாதே தங்கமே
உந்தன் காதலன் நான், அஞ்சிடாமல்
என்னுடன் வந்து உறவாடு ,கலங்காதே
மருளாதே,காலமெல்லாம் உன்
உயிருக்கு உயிராய் உன்னை நான்
என் கண் போல் காத்திடுவேன் கண்ணம்மா

நன்றி சொல்வேனடி உனக்கு என்
மனதை அறிந்துகொண்டாய் என்னிடம்
உன்னைத் தந்துவிட்டாய் ...பார் , பார்,
தென்றலில் உந்தன் மேலாடையாடிவர
பூவையே என் கைகளில் உன் வாசம்,
வா வா கண்ணே உன்னைத் தாலாட்டுவேன்
உந்தன் காதலன் நான் என் மார்பில் அணைத்து .

நானும் நீயும் இன்று நாமானோம்
இந்த நாளோடு சேர்ந்து உறவாட
பார் பார் பெண்ணே பார்
நீல வானில் நிலவும் நம்மைப் பார்த்து
ஏனோ பொறாமைகொண்டு, நம்மைப்
பாராமல் இன்று ஓடுதடி வெண்மேகம் நாடி
உறவைத்தேடி ............

நெஞ்சினிலே நெஞ்சினிலே
நீ வந்துவிட்டாய் வந்துவிட்டாய்
இனி நான் காண்பது எப்போதும்
நீதான் நீதான் நிஜமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Jun-18, 12:23 pm)
Tanglish : kaadhal
பார்வை : 85

மேலே