உன்னன்பு வேண்டுமடி எனக்கு

என் நெஞ்சை
முதன் முதலாய்த்
துளைக்க
உன் விழிகள்
தொடுத்த இரு கணைகள்...

உனது ரோஜா
உதட்டில் விரியும்
இரட்டைஇதழ்கள்
சிந்திச் சிதறிய
தேன் துளிகள்
அரைத்துப்பூசிய
நினைவுகளால்
கலைந்த என்
நித்திரை இல்லா
ராத்திரிகள்....

மருதாணிபூசிய
உன்னிரண்டு
கைகள் போல்
சிவந்து வேகிக்
கிடக்கும்
எனது விழிகளுக்கு
இரவில் வந்து
கரைந்து மறையும்
நிலாபோல் இல்லாது
என்றும் பெளர்ணமியாய்
இலங்கும் உனது பொன்
முகத்திலிருந்து
பூக்கும் புன்னகை
முத்துக்களைக்
அள்ளிக் அள்ளிக்
காணிக்கையாய் கொடு
வெயிலில் அலைபவவனுக்கு
மர நிழல் தரும்
இதமான சுகத்தை
அவை இரண்டும்
பெற்று மகிழட்டுமே
செம்மை தணியட்டுமே
அங்கு மென்மை பிறக்கட்டுமே

நமக்குள் இனி
வன்மம் வேண்டாமே
உன் அன்பை
மாத்திரம் கொடு
அதனை அபிரிமிதமாய்
எனக்கு அள்ளிக் கொடு
எத்தனை ஜென்மம்
வந்தாலும்
நீதான் வேண்டுமடி
எனக்கு
வாழ்க்கைத் துணை
அந்த நீண்ட
பயணத்தில்
இறுதி வரை
என்னுடன்
கூடவே இருக்கும்
வழித் துணை

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (9-Jun-18, 12:37 pm)
பார்வை : 178

மேலே