கொஞ்சித்து

கொஞ்சித்து, கொஞ்சித்து. எங்கடா போயிட்ட சாமி? சீக்கிரம் வாடா கண்ணு முட்டாயி வாங்கித் தாறேன்.
😊😊😊😊😊😊
யாரை அம்மா 'கொஞ்சித்து' -ன்னு கூப்படறீங்க?
😊😊😊😊😊
எம் பேரனத்தான் கூப்படறணுங்க.
😊😊😊😊😊
அது என்ன 'கொஞ்சித்து' -ன்னு பேரு வச்சிருக்கறீங்க?
😊😊😊😊😊😊
அய்யா, எம் பையனுக்கு ரட்டைப் பசங்களுங்க. மூத்த பையனுக்கு எங்க மொதலாளி பேர வச்சிட்டமுங்க. அவம் பேரு ரஞ்சித்துங்க அய்யா. ரண்டாவது பையனுக்கும் அதே மாதிரி பேரு வைக்கணும்னு எம் பையன் கபாலி ஆசப்பட்டாணுங்க. அதான் ரண்டாவது பையனுக்கு 'கொஞ்சித்து' -ன்னு பேரு வச்சுட்டாணுங்க.
😊😊😊
அட பராவல்லயே. ரஞ்சித் இந்திப் பேரு. கொஞ்சித் -ன்னு இந்திப் பேரு கெடையாது. ஆனா அருமையான இந்திப் பேரு மாதிரியே இருக்குது. இந்தப் பேர நான் முகநூல்லயும் வாட்ஸ்அப்பிலயும்
பிரபலப்படுத்தப்போறேன். இனி தெருவுக்கு ஒரு 'கொஞ்சித்' இருப்பான். ரொம்ப நன்றிம்மா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (9-Jun-18, 4:12 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 97
மேலே