ராமு-சோமு உரையாடல்

ராமு : டேய் சோமு, நீ என்ன நினைக்கிற , இந்த
வார,வார சந்தை, மற்றும் ஐந்து வருஷத்தில்
ஒருமுறை நடக்கும் பொது தேர்தல்............

சோமு : ஐயா, ஏதோ இந்த கிடா புத்திக்கு தோன்றதை
சொல்லிப்புடறேனுங்க.........மத்தத நீங்கதான்
சரியாய், இல்லையானு சொல்லணும் ..
ராமு : சொல்லுடா, சொல்லு, நீ ஒரு படிக்காதமேதைன்னு ன்னு
எனக்கு தெரியும் அதான் ஒண்ண கேட்டன்ல.....
சோமு :ஐயா, நம்ம சந்தையை எடுத்துக்கிட்டா, இங்கே
சந்தைக்கு வந்த விலைப்பொருள், விற்பவர்,வாங்குபவர்,
சும்மா வேடிக்கைபார்க்கவருபவர், சந்தாவாங்கும்
ரவுடிகள் ....................தேர்தல் எடுத்துக்கிட்டாலும் இதே
தேர்தலில் நிற்பவன்-விலைப்பொருள்; விற்பவர்-
கட்சி; வாங்குபவர்-பொதுமக்கள்; ரவுடிகள்- குன்றகள்
வேடிக்கைப்பார்ப்பவர்- ஆட்சி ஏஜெண்டுகள்......
இந்த ஒப்புதல் வேடிக்கையாய் இவ்ல்லையா ஐயா
சந்தையும், தேர்தலும் ஒரே சிட்டுவேஷனுங்க ....!!!!
இதில் இரக்கமற்று தரத்தை ஏற்றி பொய் சொல்பவனே
வெற்றிபெறுவான்----வாங்குபவன் எப்போதும் ஏமாளி
வாங்காதவர்- அறிவாளி (ஒட்டு போடாதவர்)

ராமு : சோமு., ஏழே பின்னிட்ட போ.............நீ
உண்மையிலே மேதைதாண்டா ...........
சோமு : அப்படிலாம் ஒன்னும் இல்லீங்க................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jun-18, 5:15 pm)
பார்வை : 177
மேலே