ஓநாய்-நரி காட்டில் உரையாடல்

ஒரு காட்டிலே, ஒரு ஓநாயும் ,குள்ளநரிக்கும்
இடையிலான கற்பனை உரையாடல்
---------------------------------------------------------------

குள்ளநரி : அண்ணே, ஓநாய் அண்ணே எங்க ரொம்ப
நாளா இந்தப்பக்கம் வர்றதில்லை.........

ஓநாய் : அதுவா நரி தம்பி, இப்பெல்லாம் நம்ம
சிங்கராஜா இந்தப்பக்கம் வர்ரதில்லயா
நமக்கு மிச்சம் மீதி மானோ, மாடோ ,பன்றியோ
கிடைப்பதில்லை , அதான் .......வேற இடம்
தேடி போறேன்........அது சரி நரி ஒண்ணா ரொம்ப
நாளா ஒன்னு கேக்கணும்னு நெனச்சேன்
இப்பதான் அதுக்கு நேரம் வந்திச்சு.....
: நாட்டுலே இப்பலாம் மனிதர்கள் நம்மள
விட ஏமாத்துவேலைல கெட்டிக்காரர்களாக
இருக்காங்களாம்; முன்னலாம் அவனப்பாரு
நரி மாதிரி, ஓநாய் மாதிரி ஏமாத்தி திரியர்தா
சொல்லுவாங்க கேட்டிருக்கேன்.........இப்ப
இவங்க நம்மளையே மிஞ்சிட்டாங்களாமே
இதப்பத்தி நீ என்ன நெனைக்கறே தம்பி......

குள்ளநரி : அண்ணே, அவங்க மனுஷங்க நம்மளவிட
ஒரு படி மேல புத்திசாலிங்க ......அதான்
நம்மிடமிருந்து கத்திக்கிட்டு நம்மளையே
மிஞ்சிட்டாங்க போல இருக்கு, இந்த நரி-ஓநாய்
தந்திரத்தில்.........எப்படியோ அண்ணே ஒன்னு நனெச்சி
எனக்கு திருப்தி.........மனிஷனே மிருகம் நம்ம
கிட்ட ஒன்னு அத்திகிட்டாங்க இல்ல......அதுதான்
எப்பவும் நம்ம பேர்லதான் இது இருக்கும்-நரி-ஓநாய்
தந்திரம் , அவன் ஓநாய், நரி என்பதெல்லாம்.....
நமக்கு தலைமுறைக்கு இது பொதுமண்ணே.........

ஓநாய் : ஆமாம் நரியார்......அதோ பாரு ஒரு காட்டுராஜா
வாயில் சின்ன மானோட வராரு............ஒளிஞ்சுக்க
வா.........விட்டுவிட்டு போனா ஏதாவது மாமிசம்
கிடைக்குமான்னு பாக்கலாம்.......ரொம்ப நாளுக்கு
அப்புறம் ............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Jun-18, 6:52 am)
பார்வை : 228
மேலே