மனசே மனசே
ஆசையோடு பெயர் வைத்தேன்...
வறுமையைப் போக்கின பணத்திற்கு செல்வம் என்று பெயர் வைத்தேன்...
உயர்வைக் கொடுத்த வேலைகளுக்கு உழைப்பு என்று பெயர் வைத்தேன்...
தரம் தாழ மறுத்த சிரத்திற்கு தன்மானம் என பெயர் வைத்தேன்...
மானம் இழக்காத உறுதிக்கு சுயமரியாதை எனப் பெயர் வைத்தேன்...
மூச்சுவிடாமல் நடந்த போராட்டத்திற்கு வெற்றி என்று பெயர் வைத்தேன்...
திரும்பிப்பார்க்க மறுத்தவைகளுக்கு அவமானம் என பெயர் வைத்தேன்...
காலடியில் கிடந்த பெருமைகளுக்கு தலைக்கனம் என்று பெயர் வைத்தேன்...
தடைகள் பலவற்றை தாண்டியபடி ஓடும் கால்களுக்கு முன்னேற்றம் என்று பெயர் வைத்தேன்...
ஓய்வெடுக்க மறுத்த நிமிடங்களுக்கு முதல் வாய்ப்பு என்று பெயர் வைத்தேன்...