தோல்விகள்

உன்னை முதல் முறை உணர்ந்த நொடி என்னுள் மொத்த உணர்வுகளும் உடைந்தது.
மறுமுறை உன்னை கண்ட பொழுது இதயம் பலமிழந்து போனது.
மீண்டும் மீண்டும் நீ என்னை நெருங்கிய பொழுது எனக்கு போராட வேண்டுமென தோன்றியது,
கண்கள் சிந்திய கண்ணீர் இன்று ஒரு வெற்றியின் தேடலாகியது...
உடைந்த போன போது ஆறுதல் சொன்ன உறவுகளை எண்ணி பார்க்கிறேன் ...
என்னை உடைத்து போன உள்ளத்தை பெரிதும் நன்றி உணர்வுடன் காண்கிறேன்
என்னை எனக்கு அறிமுகம் செய்துவிட்ட அவமானங்களுக்கும் நன்றி...
அவமானமும் வேதனைகளும் சோர்ந்து போக வெய்த்தபோதும்...
அவை என்னை போராட வைத்தது ....போராடி கண்ட என் முதல் வெற்றி இன்றும் இனிக்கிறது

தோல்வியே நீ என் அவமானம் இல்லை ..என் அஸ்திவாரம் ..நீ இன்றி இங்கு வெற்றிகள் இல்லை..
நீ காணாத எந்த உயிரும் தலைக்கனம் கொண்டுவிடும் ..நீ செல்லாத எந்த பாதையும் கர்வத்தில் உயிர்த்து விடும் ....தோல்வியே நீ ஒரு அற்புத உணர்வு..வலியின் பிடியில் ஒரு அற்புத உணர்வு நீ




..
.

எழுதியவர் : ப்ரியங்கா.ந (8-Jun-18, 11:46 am)
சேர்த்தது : priyanga
Tanglish : tholvigal
பார்வை : 152

மேலே