பரம பதம்
வாழ்க்கை ஒரு
பரம பதம்
உயர்வும் வரும்
தாழ்வும் வரும்
நெஞ்சில்
துணிவிருந்தால்
தோல்வியும்
வெற்றி தரும் ....!!
காலம்
பல புதிர் போடும்
அதில்
இன்பமும்
துன்பமும் கலந்து இருக்கும்
தெளிந்த மனம்
மட்டுமே இரண்டையும்
பாதிக்காது காக்கும் ...!!
ஆணுக்கு பெண்ணும் ,
பெண்ணுக்கு ஆணும் ,
காணும் நொடியில்
மயக்கம் வரும்..
மனதுக்குள் ஒருவித
போதை தரும் ..,
அழியும் ,அழுகும்
உடல் என புரிந்து விட்டால்
அக்கணம் ஞானம் பிறக்கும் ....!!
பதவி தரும்
பணம் தரும்
புகழ் தரும்
பகட்டு தரும்
எல்லாம் மாயை
என உணரும்
மனம் வரும்
பொழுதே வாழ்வில்
நிரந்தர அமைதிவரும்
தன்னலம் காணா
பிறர் நலம்
கண்டால் போதும்
வாழ்வு முழுமை
பெரும் ....
அவ்வாழ்வை நோக்கி ...
என்றும் என்றென்றும்
ஜீவன்

