357 தீங்கு செய்வாரைக் காட்டிற்குச் செலுத்துதல் சிறப்பு - பிறர்க்குத் தீங்கு செய்யாமை 5

தரவு கொச்சகக் கலிப்பா

புயகமதைத் தேள்புலியைப் பொல்லாத விலங்கையெலாம்
அயர்வாக வடித்தோட்டல் அவைகள்குணத் தாலன்றோ
இயல்பின்றி யெந்நாளும் ஏதிலார்க் கிடரிழைக்குங்
கயவனையே வைதடித்துக் கானோட்ட னன்றாமே. 5

- பிறர்க்குத் தீங்கு செய்யாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பாம்பினை, தேள், புலி முதலிய கொடிய விலங்குகளை எல்லாம் மனக்கலக்கத்தோடு அடித்து விரட்டுவது அவைகளிடமுள்ள கொடிய குணத்தால் அல்லவா? எக்காரணமும் இன்றி எந்த நாளும் ஏதும் இல்லாத எளிய பிறர்க்குத் துன்பம் செய்யும் நற்குணமில்லாத தீயவனைத் திட்டி அடித்துக் காட்டுக்கு ஓட்டுவது நல்லதாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

புயகம் - பாம்பு. அயர்வு - மனக்கலக்கம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jun-18, 8:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே