பசி ஒரு மகத்தான சல்லிப்பயல்

பசித்தது
காலில் இருந்து துவங்கினேன்..
மென்மையாக இருந்தது
எலும்புகள் சிக்கலின்றி பொடித்தன.
நரம்புகள் நிதானமாய்
பிரிந்து குடலுக்குள் சென்றன.
குருதி மணத்தது.
முதுகை அரித்துக்கொண்டிருந்த பகல்
குருதி கேட்டு வாங்கி சென்றது.
பசி அடங்கிட
மிச்சமற்று போன இடுப்பின் கீழ்
ஓய்வெடுத்த அக்கவிதை
தலைக்குள் புகுந்தது.
நீளும் இரவின் மர்மங்களை
புடைத்துக்கொண்டிருந்த ஆவல்கள்
பின்னொரு பசியில்
உண்ணத் துவங்கின முகங்களை...
வெறுமையில் கிடந்த தனிமையாய்
அந்த முகமும்
அவனும்...

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Jun-18, 12:18 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 56

மேலே