ஆசை காதலா

வளைந்து
நெளிந்து செல்லும்
கரு நிற தார்சாலையிடம்
கேட்கிறாய்
நான் நடந்து சென்றேனா ?
என்று!

என் கருங்கூந்தலையும்
தாவணியையும் தீண்டும்
உரிமை கொண்ட அத்
தென்றலிடம் கேட்கிறாய்
நடந்து சென்றேனா என்று!

பச்சை பசேலென்று
வளர்ந்து பருவம்
எய்திருக்கும் அந்த நெற்
பெண்ணிடம் "உன்னை
தன் விரல்களால் தீண்டிச்
சென்றாளா?"வென
கேட்கிறாய்!

"உன் மீதமர்ந்து இந்த
பசுமையை கண்குளிர
ரசித்துச் சென்றாளா?" யென
அந்த பாலக்கட்டையிடம்
கேட்கிறாய்!

கால்களை நனைத்து
கை முகம் கழுவி உன்னை
உன்னை சுத்தமாக்கியவள்
எத்திசை சென்றாளென
அவ்வோடையிடம்
கேட்கிறாய்!

கிழக்கு மேற்கு
வடக்கு தெற்கு யென
நாற் திசைகளிடம்
எவ்வழியே சென்றேன் என
வினவுகிறாய்!

உன்னையே நெஞ்சில்
சுமந்து
தள தள வென தாமரையாய்
மலர்ந்து தன்னையே
உனக்குத் தர
காத்திருக்கும் என்னிடம்
கேட்க உனக்கென்ன
வெட்கம்!என்
ஆசை காதலா!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (11-Jun-18, 5:52 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : aasai kaathalaa
பார்வை : 225

மேலே