இறைவனை அறிந்திடுவாய்
தனக்கொரு உருவம் தந்து
தன்னைப்போல் உருவமைத்து
மண்ணில் வளரவிட்டானோ
இறைவன் தன 'ரோபோக்களை
தன் உருவின் அடிப்படையில்
உருவாக்கி பெருக்குகின்றானோ
'மனித ரோபோக்களை' மனிதன்
அது,'அவன் படைப்பு' இதுவோ
இவன் படைப்பென்கிறான் இவன்
இறுமாப்பில் , அறிந்தானில்லை
அசலுக்கு, நகலுக்கும் வித்யாசங்கள்
காற்றாடியும் வானில் பறக்கிறது
அது என்றாவது பருந்தாகுமா
இந்த இடைவெளியே இறைவனை
யார் என்று மனிதனுக்கு உணர்த்த
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
