இசை
துயில் தேடி துவள்கையில்
நித்திரையின் மாத்திரையாய்
துன்ப துயரத்தில்
துன்பத்திலும் துணையாய்
இன்ப இனிமையில்
இன்பத்தின் இரட்டிப்பாய்
எனது
கண்ணீரில் அமைதியாய்
புன்னகையில் பூரிப்பாய்
இவ்வுலகில்
என்னை புரிந்துகொண்ட உணர்வே
என் இனிய இசையே