ஆயிரம் கேள்விகள் உண்டு

ஆயிரம் கேள்விகள் உண்டிங்கு
எத்தனை பதில்கள் இங்குண்டு
மனதில் குழப்பம் தான் மிச்சமுண்டு
விடை தெரிந்த சில கேள்வி
புதிர் கொண்ட பல கேள்வி
விடை தெரியா மர்மங்கள்
வாழும் போதும்
வாழ்ந்த பிறகும்
வாழ்கின்ற போதும்
என்ன ?ஏது? எப்படி? எதற்காக ? போன்ற வினாக்கள் பல விடையங்களுக்காக
ஆனால் ஒரு பொருளுக்கோ பல கேள்வி ! பலாயிரம் பதில்கள் !
எது சரி ?எது தவறு? தெரியாது
குழம்பியே வாழ்க்கை கடத்தும் நாம்
போகும் போக்கு அறியவில்லை
விடை தேடிக்கொண்டே போகிறோம்
இது தான் விடை என்ற தடையத்தோடும் அனுமானத்தோடும்
செல்வோம் ? சிறந்த விடை தேடி
தேடுவோம் பல பதில்கள்
எடுப்போம் சரியான பதிலை
போற்றுவோம் நல்ல எண்ணங்களை
முடிவெடுப்போம் நல்ல மாற்றத்திற்காக ........

எழுதியவர் : பிரகதி (13-Jun-18, 11:28 pm)
சேர்த்தது : பிரகதி சி
பார்வை : 37
மேலே