மதம்
சாதியைப் அப்பாற்பட்டு செயல்படணும்...
சத்தியத்தை சத்தியமாய் அனைவருக்கும் போதிக்கணும்...
மன அமைதி கற்றுக்கொடுப்பதை கடமையாய் செய்யணும்...
பொய் புரட்டுகளை புறம்பே தள்ளனும்...
மனிதநேயத்தை மனிதனில் விதைக்கணும்...
அன்பின் வீரியத்தை அளவில்லாமல் சொல்லணும்...
சகமனிதனை சிநேகிக்க சொல்லிக் கொடுக்கணும்...
காலத்தின் முக்கியத்துவம் உணரப் பேசணும்...
பழி பாவங்களுக்கு விலகும் வழியைக் காட்டிக் கொடுக்கணும்...
உண்மையை கடைபிடிக்க கற்றுக் கொடுக்கணும்...
ஆசையில் அகப்படாமல் காத்தருளனும்...
பெருமை முகத்தை அழித்துப் போடணும்...
உதவும் மனங்களை பெருகச் செய்யணும்...
பகைமை மறத்தலை வற்புறுத்தி பேசணும்...
நம்பிக்கை விதைத்து முன்னேற்றச் செய்யணும்...
தப்பிதங்களுக்கு எல்லாம் கடிந்து கொள்ளணும்...
பிறப்பின் நோக்கத்தை உரைக்கும்படி சொல்லணும்...