காதல்
இன்று ஏனடி பெண்ணே
இப்படி கண்டும் காணாதுபோல்
காட்சி....நேற்று நான் உனைக்காண
வரவில்லையே ...அதனால் வந்த ஊடலா கண்ணே
இசையிலும் ஓர் ஊடல் அறிவேன்
பாடகர் ஸ்ருதிக்கு தம்பூரா இழையவில்லை என்றால்,
இவை இரண்டும் இழைந்துவிட்டால் சுருதியில்,
இசையில் பெரும் கூடல் கண்ணே,
ஊடலை மறந்து என்னை மன்னிப்பாயா,
வந்து என் மடிமேல் தலை வைப்பாயா
உன் முகத்தில் என் இதழ்களால் இசைத்திடுவேனே
நம் கூடல் அடையாளமாய்