முதலை செய்த கொலை

“ஒரு பிரிட்டிஷ் , 24 வயது ஊடகவியலாளன் கைகழுவும் போது முதலை தாக்கி உயிர் இழந்தான்” இது பத்திரிகை ஒன்றில் வந்த செய்தி . இலங்கையில் முதலையின் தாக்குதலினால் உயிர் இழந்தவர்கள் பலர். தென் பகுதியில் உள்ள களுகங்கை, ஜின் கங்கை நதிகளில் முதலைகள் உண்டு . இந்த செய்தியை வாசித்தவுடன் உடனே 1949 யில் தென் பகுதியில் நடந்த முதலை செய்த கொலைதான் என் நினைவுக்கு வந்தது
****
இலங்கையின் தென் பகுதியில் உள்ள பண்டாரகம நகரத்தில் இருந்து 14கி மீ தெற்கே உள்ள கிராமம் படப்போல. இக்கிராமத்தில் தென்னை , ரப்பர் தோடங்களும் வயல்களும் உண்டு . மாதம்பே நதியானது இதன் அருகே
ஓடி அம்பலாங்கொட அருகே கடலோடு கலக்கிறது . இந்த நதியின் ஹப்புகோட எல என்ற சிற்றாறு இருபது ஏக்கர் வயல். தென்னை. ரப்பர் விளையும் போரளுவா தோட்டத்தின் மேற்குப் பகுதியில் செல்கிறது. இந்த சிற்றாற்ன் இருபக்கத்திலும் குதறு என்ற மரம் செழித்து வளர்ந்திருந்தது. சிற்றாற்றினை கடக்க மரத்தினாலான இரண்டு பாலங்கள் நூறு யார் இடைவெளிகளில் இருந்தன .ஆற்றினைக் கடக்க உதவியாக அந்த பாலங்கள் இருந்தன. படகிலும் கடக்கலாம். படுகு .சிற்றாறினைக் கடந்து சென்று நிற்கும் இடத்தை ஊர்வசிகள் “தொட்டுப் போல” என்பர். அந்த இடத்தில இளம் பெண்கள் குளித்துக் கும்மாலம் அடிப்பார்கள். முதலைகளின் தாக்குதலில் இருந்து அவர்களைப் பாதுகாக்க அவர்கள் குளிக்கு இடம் சுற்றி வலையினால் வெலி போட்டிருந்தது . அப்படி இருந்தும் ஒரு பெண் முதலைக்கு பலியானாள்

போரளுவா தோட்டத்தின் மேற்பார்வையாளராக பண்டாரகம 75 வயது அப்புசிங்கோ இடுந்தான் . மீசைக் காரன். அந்த வயதிலும் திடகாத்திரமான தன் தேகத்தை அவன் பேணி வந்தான். அவனை கங்காணி சிங்கோ என்று அடைப் பெயர் சொல்லி அழைத்தனர். தொட்டத்தை பராமரிக்க கிராமவாசிகள் கூலிக்கு உதவினார்கள் .

அப்புசிங்கோ பல வருடங்களுக்கு முன் திருமணமாகி அவனின் மனைவி இறத்தாள். அத்திருமணத்தால் சிங்கோவுக்கு 55 வயதில் மகன் இருந்தான் . அவனுக்கு தந்தையின் போக்குப் பிடிகாததால் தந்தையோடு வாழவில்லை. தனிமையில் வாழ்ந்த சிங்கோ ஒரு துணையைத் தேடினான்.

அந்த கிரமத்தில் ஒரு ஏழைக் குடும்பதில் உள்ள விதவை நோனாஹாமிக்கு நான்கு பெண் பிள்ளைகள் . அதில் மூன்றாவது மகள் 26 வயதுள்ள மங்கோநோனா. அழகானவள். 1944 ஆம் ஆண்டில் அப்புசிங்கோவின் தோட்டத்தில் வேலை செய்ய சென்ற போது அப்புசிங்கோவின் பார்வை அவள் மேல் விழுந்து. அவளை தன் வைப்பாட்டியாக வைத்திருக்க விரும்புவதாக கல்யாணத் தரகர் தேமிஸ் என்ற தன் நண்பனுக்கு சிங்கோ தன் விருப்பத்தைச் சொன்னான் அப்புசிங்கோவுக்கு . அந்த வயதிலும் பெண் ஆசை விடவில்லை . அப்புசிங்கோவுக்கும் அந்த இளம் யுவதிக்கும் 45 வயது வித்தியாசம். சிங்கோவுக்கு ஒரு மகள் இருந்தால். மங்கோநோனாவுக்கு சில வருடங்கள் மூத்தவளாக இருந்திருப்பாள். இளம் வயது பெண்ணை வயது கூடியவர்கள் வைப்பாட்டியாக வைத்திருப்பது தென் பகுதி கிராமங்களில் உள்ள கலாச்சரம்..
“ சிங்கோ, என்னால் அவளின் தாயோடு பேசி அதை ஒழுங்கு செய்து தர முடியும்.. அனால் கொஞ்சம் செலவாகும்” என்றான் தேமிஸ்.
” எவ்ளவு செலவு வரும்.” சிங்கோ தேமிசிடம் கேட்டான்:
“ நீ என் நண்பன் என்பதால் என் தரகு பணம் எடுக்க மாட்டேன் . உனக்கு ஒரு துணை தேவை மங்கநோனவின் தாயுக்கு முந்நூறு ரூபாய் கொடுத்தால் அவள் சம்மதிக்கலாம். அவள் சம்மதித்தால் நீ அவளை திருமணம் செய்யாமல் உன் வீட்டில் வைதிருக்கலாம். அனால் அவளின் உடை உணவு. செலவு. எல்லாம் உன் பொறுப்பு. அதுக்கு நீ சம்மதமா”? தேமிஸ் கேட்டான்

சற்று சிந்தித்த பின் சம்மதம் தெரிவித்தான் அப்புசிங்கோ. அவனுக்கு தேவை அவனின் தனிமையைப் போக்க ஒரு பெண்.
தரகு வேலையை தேமிஸ் வெற்றிகரமாக செய்து முடித்தான்.
****
மங்கோநோனா அப்புசிங்கோவின் குடிசை வீட்டில் வாழத் தொடங்கினாள். அந்த குடிசை சிற்றாருக்கு அருகில் ஒரு குன்றத்தில் இருந்தது. . அந்த தென் பகுதி கிராமங்களில் அக்கால கலாச்சாரத்தின் படி திருமாணமாகாமல் கணவன் மனைவியாக வாழ்வது சகஜம். அதை சமூகம் தடுப்பதில்லை. தமிழ் நாட்டில் சில ஜமீன்தார்கள் பண்ணையார்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்தது போல். அப்புசிங்கோவும், மங்கோநோனாவும் திருமணம் செய்யாமல் ஒன்றாக 1944 ஆண்டு முதல் வாழத் தொடங்கினார்கள் . "ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்!" என்பார்களே அது அவர்களின் வாழ்க்கையில் உண்மையாயிற்று. அவர்களுக்கு 1945 இல் மாப்பிநோனா என்ற பெண் பிறந்தாள்
அந்த பெண்ணுக்கு மூன்று வயதான போது அப்புசிங்கோ மங்கநோனாவின் மேல் சந்தேகப் படத் தொடங்கினான்’ தனக்கும் அவளுக்கும் பெரிய வயது வித்தியாசம். அதனால் தனது 72 வயதில் தனக்கு எப்படி குழந்தை பிறக்கும் என்பது அப்புசிங்கோவின் வாதம். அதோடு மாப்பிநோனா தன்னைப் போல் இல்லை என்பதும் சிங்கோவின் வாதம். அந்த நிலையில் மங்கோநோனா திரும்வும் 1948 இல் கருவுற்றாள். ஓரு குழந்தை பிறந்து இறந்தது.. சிங்கோவின் வீட்டுக்கு ஜெயசேன என்ற வாலிபன் அடிக்கடி வந்து போவான். சிங்கோவின் சந்தேகம் அவன் மேல் விழுந்தது. தினமும் வீட்டில் வாக்குவாதம் .சில நேரம் கோபத்தில் மங்கோநோனாவையும் , மாப்பிநோனாவையும் சிங்கோ அடித்து விடுவான். ஒரு நாள் அவனின் தொந்தரவு தாங்கமுடியாமல் தன் தாய் வீட்டுக்கு மகளோடு போய் மங்கோநோனா இருந்தாள்.. மகளைத் தன் வீட்டில் வைதிருந்தால் தனக்குச் செலவு அதிகரிக்கும் என்பதால் மகளையும் பேத்தியையும் திரும்பவும் சிங்கோவிடம் திருப்பி அனுப்பினாள் நோனாஹாமி. . அவள் திரும்பி வந்ததை விரும்பாத அப்புசிங்கோ நோனாஹாமியிடம் போய் அவளுக்கு 200 ரூபாய் தருவதாயும். மங்கோநோனாவும், மகள் மாப்பிநோனாவும் அவளோடு இருக்கட்டும் என்ற கேட்டதுக்கு அவள் மறுத்து விட்டாள்.
1949 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி மாலை 4 மணியளவில் அப்புசிங்கோ வீட்டில் இருந்து மங்கோநோனாவினதும் அவளின் மகளினதும் அபயக் குரல் கேட்டதாக போலீஸ் விசாரணையின் போது அப்புசிங்கோவின் வீட்டுக்கு அருகே விறகு பொறுக்கிய இரு பெண்கள் சொன்னார்கள் . அதே தினம் இருவர் மாலை ஆறு மாணிக்கு சிற்றாற்றில் மீன் பிடிக்கும் பொது மங்கோநோனாவும் அவளும் மகளும் ஆற்று பக்கம் போனதைக் கண்டதாக சொன்னார்கள். . அதன் பின் இருட்டும் போது அப்புசிங்கோ படகு ஒன்றில் ஆற்றில் சென்றதைக் கண்டதாக சொன்னார்கள் .
பெப்ரவரி 3 ஆம் திகதி காலை ,நெருப்பு பெட்டி வாங்கித் தரும்படி தனக்குப் பணம் கொடுத்த மங்கோநோனாவினது வீட்டுக்கு சென்று வாங்கிய நெருப்பு பெட்டியையும் மிகுதி பணத்தை கொடுக்க சென்ற போது அவர்கள் வீட்டில் இருவர்களையும் காணவில்லை . அப்புசிங்கோ அவர்கள் நோனாஹாமி வீட்டுக்கு சென்று விட்டதாக சொன்னான் என்று விசாரணையின் போது தெரிய வந்தது .
பெப்ரவரி 4 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் ஆற்றுக்கரை பக்கத்தில் உள்ள இந்துரா மரங்களிலன் இலைகள் பறிக்க சென்ற இருவர் ஆற்றுக் கரை ஒரத்தில் ஒரு மூன்று அடி அகலமும் நாலடி ஆழமும் உள்ள நீர் இருந் குழியில்ஒரு பெண்ணின்.பிரேதம் கழுத்தில் கையிற்றுடன், நீண்ட கைச்சட்டையுடன், அழுகிய நிலையில் நீரில் மிதப்பதை கண்டார்கள் . உடனே அவர்கள் கிராமத்து விதானையாருக்கு அறிவித்தனர் . அவரும் உடனே அம்பலாங்கோட பொலீசுக்கு அறிவித்தார். பொலீஸ் கொன்ஸ்டபில் மார்சல் என்பவரும் மூன்று பொலீஸ்காரர்களும் ஆற்றுக் கரைக்கு வந்து பிரேதத்தை மீட்டு வைத்தியப் பரிசோதனைக்கு அனுப்பினார்கள். விசாரணை தொடர்ந்தது,
.****
அந்தப் பிரேதம் மங்கோநோனாவினது என்று அவளின் தாயாலும். சகோதரிகளாலும் அடையாளம் காணப்பட்டது அவளின் மகளின் பிரேதம் காணப்படவில்லை பிரேத் பரிசோதனையின் போது மன விரக்தியால் தற்கொலையாக இருக்கலாம் என வைத்திய அதிகாரி சொன்னார். ஒரு வேளை முதலைகளின் தாக்குதலுக்கு உற்பட்டு இறந்த உடலை முதலை குழிக்குள் கொண்டு போய் உண்பதுக்கு பதுக்கி வைத்திருக்கலாம் எனவும் கருதினார்கள் . அந்த குழி அமைந்த விதமானது முதலை தோண்டிய குழி போல் இருக்க முடியாது என மிருக காட்சி சாலை நிபுணர் சொன்னார். ஆகவே அந்த குழி மனிதனால் தோண்டப்பட்டிருக்கலாம் என்று முடிவு எடுத்தனர். அப்படி இருந்தால் குழிக்கு அருகே காலடி தடயங்கள் இருக்கவில்லை .சந்தேகம் அப்பசிங்கோ மெல் பொலலீசுக்கு விழுந்தது .மேலும் திடீர் என சில முதலைகளை சுட்டு வயிற்றை வெட்டி பார்க்கும் படி கொன்ஸ்டபில் மார்சலுக்கு அவரின் அதிகாரி சொன்னார். அவரும் சில முதலைகளைக் கொன்று வயிற்றினை பிரித்துப் பார்த்த போது, ஒரு பெரிய முதலையின் வயற்றில் இருந்து வளையல்கள் , தலை முடி, கழுத்து மாலையில் அணியும் மணிகள், கயிறு, ஒரு விரலின் நகம் ஆகியவற்றை கண்டு எடுத்தார்
அவை இறந்த மங்கோநோனாவினதும், அவளின் மகளினதும் என்று அடையாளம் காணப்பட்டது அதோடு அப்புசிங்கோவின் வீட்டில் பரிசோதனை செய்த பொது ஒரு கயிறும் கண்டு பிடிக்கப்பட்டது . அப்புசிங்கோவின் வீட்டில் இருந்த கயிறும் , முதலையின் வயிற்றில் இருந் கயிறும் ஒரே மாதிரி என்று பரிசோதகர் சொன்னார். மங்கோநோனாவும், மகளும் பெப்ரவரி முதலாம் திகதி மறித்திருக்கலாம் என வைத்திய அதிகாரியின் அறிக்கை சொன்னது. அதன் படி மரணம் தற்கொலையாக இருக்கும் என்று கருதப்பட்டது. அதே சமயம் முதலைகள் தாக்கி இறந்திருக்கலாம் என்றும் கருதினார்கள். அதே வேளை அப்பு சிங்கோ கொலை செய்திருக்கலாம் என்றும் போலீஸ் சந்தேகித்தது. பல சாட்சிகளை போலீஸ் விசாரித்த போது அப்புசிங்கோ தனது வைப்பாட்டியையும், மகளையும் நடத்திய விதத்தில் அவர்களை அப்புசிங்கோ கொலை செயதிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் மேல் கொலை குற்றம் சுமத்தி வழக்கு விசாரணை காலி நீதி மன்றத்தில் எட்டு நாட்கள் நடந்தது.
ஆங்கிலம் பேசும் ஜூரிகள் வழக்கை கேட்டு அப்புசிங்கோ நிரபராதி என்றும், மங்கோநோனாவினதும், மாம்பி நோனவினதும் மரணம் முதலையால் ஏற்பட்டிருக்கலாம் என்று தீர்ப்பு அளித்தனர் . இந்த கொலை வழக்கு “முதலை கொலை வழக்கு” என நாமமிடப் பட்டது .கொலை செய்தது என் கருதப்பட்ட முதலை சுடப்பட்டு இறந்து விட்டது. அப்புசிங்கோ அந்த சிற்றாற்றில் வாழ்ந்த முதலைக்கு நன்றி தெரிவித்திருப்பான் . இன்னொரு வைப்பாட்டியைத் தேடிப் போனானோ தெரியாது.
*****

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (15-Jun-18, 9:32 am)
பார்வை : 240

மேலே