ஆழ் துளை கிணறு

ஆழ் துளை கிணறு

அம்மா !
இனி என்னை குறை
சொல்ல மாட்டாய்
இருளை கண்டும்,தனிமையை
கண்டும் பயப்படுகிறேன் என்று !

இப்பொழுது தனிமையில்தான்
இருக்கின்றேன் அதுவும்
இருட்டில்தான் இருக்கின்றேன்
அதற்காக அண்ணனை குறை
சொல்லாதே ! விளையாடும்போது
நான் கவனிக்கவில்லை
ஆழ்துளை கிணறு திறந்திருப்பதை !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Jun-18, 10:56 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 283

மேலே