என் மனம் ஒரு குரங்கு

என் மனம் ஒரு குரங்கு

பக்கத்து வீட்டுக்காரர் புதிதாய்
வாங்கியிருக்கும் கார் !
அடுத்தவனுக்கு வந்து விட்ட
உத்தியோக உயர்வு
நேற்று பார்த்த பெண்ணின்
அழகு !
காரியம் முடித்தும் வராத
லஞ்சம் !
விலைக்கு வரும் எதிர்
வீடு !
மறைத்து வைத்து இருக்கும்
பணம் !
மனைவியின் பங்கில் வரவேண்டிய
சொத்து !
இன்னும் வந்து சேராத
வட்டி !
தியானத்தில் இருக்கிறார்
வந்துவிடுவார்

யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தாள்
என் மனைவி !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Jun-18, 10:58 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 94

மேலே