எங்கே அந்த அழகிய தருணங்கள்

குட்டிக் குயில் கூக்குரலிட்டு துயில் எழுப்பும் அத்தருணம் ,
சுட்டிப் பெண் நான் புத்துணர்வுடன் எழுவேன்
சுல்லென கதிர் ஒலிப்பதைக் கண்டு தத்தித் தாவி கதவைத் திறந்தால் ,
சில்லென வீசும் தென்றல் காற்று
ஆலங்குச்சியில் பல் துலக்கி ,
ஆற்று நீரில் குளியலாடி ,
மாமரத்தடியில் தூக்கம் போட்டு ,
பாட்டி சுட்ட அடை அவியலை சுட சுட உண்ண
அடடா ! இது அல்லவோ சொர்கம் ....

இன்றோ நாலடிச் சுவற்றுக்குள்
சன்னலை சாத்திக்கொண்டு
அக்கம் பக்கம் போக அச்சப்பட்டு ...
இதுவும் வாழ்க்கையா??

எங்கேப் போனது இயற்கைத் தந்த இசைச் சாரல்கள்?

நெகிழி குழம்புகளும் ,
ரசாயனச் சாறுகளும்
நம் வாழ்வின் நாயகர்கள் ஆனார்கள்

என்னவென்று கேட்டால் : இதுக் கணினி உலகமாம்
எனக்கு வேண்டாம் இந்த முடங்கிப் போன வாழ்க்கை
நான் செல்கிறேன் என் பாட்டி வீட்டிற்கே !!

எழுதியவர் : அபிராமி விஜயராகவன் (17-Jun-18, 9:28 am)
பார்வை : 92

மேலே