வலிய வலிகள்
காதல் நிராகரிப்புகள் வலிக்கும்...
அதீத அன்பு வலிக்கும்...
உடையும் உறவுகள் வலிக்கும்...
கண்ணீரின் வழிகள் வலிக்கும்...
மறந்துபோகாத அவமானங்கள் வலிக்கும்...
வீணாய்ப்போகும் உழைப்பு வலிக்கும்...
எதிர்பாராத தோல்விகள் வலிக்கும்...
தவறினப்போன காலங்கள் வலிக்கும்...
ஆனந்தம் தந்த நினைவுகள் வலிக்கும்...
அரிதாய் நிகழும் சந்திப்புகள் வலிக்கும்...
ஆச்சரியமான வெற்றிகள் வலிக்கும்...