இயற்கையும் மனிதனும்

இயற்கை மனிதனுக்கு
அவன் கேட்டிடாமலேயே
இறைவன் தந்த வரம்
அந்த இயற்கையெனும்
குடையின் நிழலில் வாழ்ந்துவரும்
மனிதன் , இன்று இயற்கைக்கு
எதிராய் செய்துவரும்
அத்துமீறல்கள் அவன்
அழிவிற்கு ஓர் ஆரம்பமோ?
அன்று வேள்வியை மெச்சி
சிவனார் 'பஸ்மாசுரனுக்கு'
அளித்தார் ஓர் வரம் ;
அதுவே அவன் யாரைத் தொட்டாலும்
அவர் சாம்பலாகிவிடுவார் என்பது
வரம் பெற்ற அசுரன் அதை முதலில்
கொடுத்தவன் மீதே பிரயோகம் செய்திட
விஷப் பரீட்சையில்..... மோகினியாய்
வந்து அசுரன் மனதில் காமம் தந்து
அந்த மயக்கத்தில் அவனே தன் தலையைத்தொட்டு
சாம்பலாக செய்தாராம் மாலவன் ''''''''
இயற்கையையோடு மனிதன் புரியும்
விபரீதங்களை இப்படித்தானா?
தனையே தான் மாய்த்துக்கொள்ள
விழித்துகொள்ளடா மனிதா ............
இல்லையெனில் மீண்டும் ஓர்
மோகினி ரூபம் எடுத்திடுவாள்
'பராசக்தி' உன்னை அழித்திட பூண்டோடு.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jun-18, 9:52 am)
பார்வை : 2473

மேலே