அபிராமி விஜயராகவன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அபிராமி விஜயராகவன் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 09-Oct-2001 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 31-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 2 |
அழையா மழையே !
என்னை நீ அழைத்ததுப் பிழையே...
குதித்திடும் துளியே !
உன்னை நான் பிடித்திட நினைவேன்...
பிடித்திடும் முன்னரே ,
என்னை நீ நனைப்பது முறையா ?
இடித்திடும் இடி அது ,
நீ அடித்திடும் பறையா ?
திடுக்கிடச் செய்கிறாய் !
திடீரெனச் செல்கிறாய் !
அழைத்தது ஏனென்று சொல்லவும் மறுக்கிறாய் ...
தொலைந்திடும் மழையே!
மறுமுறை வருகையில் காரணம் சொல்லிடு,
நானும் சட்டென வருகிறேன் ,...
பூந்தோட்டத்திற்கு முள்வேலி
கம்பிகளுக்கப்பால் வாசனையைக் கடத்திச்
செல்வதுதான் தென்றலின் சோலி..
குட்டிக் குயில் கூக்குரலிட்டு துயில் எழுப்பும் அத்தருணம் ,
சுட்டிப் பெண் நான் புத்துணர்வுடன் எழுவேன்
சுல்லென கதிர் ஒலிப்பதைக் கண்டு தத்தித் தாவி கதவைத் திறந்தால் ,
சில்லென வீசும் தென்றல் காற்று
ஆலங்குச்சியில் பல் துலக்கி ,
ஆற்று நீரில் குளியலாடி ,
மாமரத்தடியில் தூக்கம் போட்டு ,
பாட்டி சுட்ட அடை அவியலை சுட சுட உண்ண
அடடா ! இது அல்லவோ சொர்கம் ....
இன்றோ நாலடிச் சுவற்றுக்குள்
சன்னலை சாத்திக்கொண்டு
அக்கம் பக்கம் போக அச்சப்பட்டு ...
இதுவும் வாழ்க்கையா??
எங்கேப் போனது இயற்கைத் தந்த இசைச் சாரல்கள்?
நெகிழி குழம்புகளும் ,
ரசாயனச் சாறுகளும்
நம் வாழ்வின் நாயகர்கள் ஆனார்கள்