அழையா மழை
அழையா மழையே !
என்னை நீ அழைத்ததுப் பிழையே...
குதித்திடும் துளியே !
உன்னை நான் பிடித்திட நினைவேன்...
பிடித்திடும் முன்னரே ,
என்னை நீ நனைப்பது முறையா ?
இடித்திடும் இடி அது ,
நீ அடித்திடும் பறையா ?
திடுக்கிடச் செய்கிறாய் !
திடீரெனச் செல்கிறாய் !
அழைத்தது ஏனென்று சொல்லவும் மறுக்கிறாய் ...
தொலைந்திடும் மழையே!
மறுமுறை வருகையில் காரணம் சொல்லிடு,
நானும் சட்டென வருகிறேன் ,...