ஆழியின் காதலி
மலைத் தந்தையின்
மடியில் கிடந்து
உறங்க முடியாமல்
உன்னுயிர் வாடி
விழிகள் பெருகி
விரிந்து ஓடி
வீடு செல்ல
விருப்பம் கொண்டு
கதிரவன் தோளிலேறி
கார்முகில் ஊர்தி அமர்ந்து
கண்களில் ஏக்கத்துடன்
காற்றெனும் சாலை வழி
உறங்கும் உன்னவன் ஆழிக்கு
உன் வரவை அறிவிக்க
முழக்கத்துடன் இடி அனுப்பி
மின்னலாளை தூதனுப்பி
மாரியேனும் உருவு கொண்டு
மன்னனுடன் இணைந்தனையோ .