தூய்மை இந்தியா

இயற்கை எழில் கொஞ்சும் இந்தியா
பருவம் தப்பாத மழை
பருவத்துக்கேற்ற பயிர்கள்
அன்னியரையும் கடல் கடந்து
தன்னை நோக்கி வர செய்த
வளம் கொழித்த இந்தியா
இன்று
தூய்மை இந்தியா நோக்கி நகர்கிறது
பசுமையால் வண்ண வண்ண பூக்களால்
தன்னை அழகு படுத்தி கொண்டவளை
பிளாஸ்டிக் பைகளால் மூடினோம்
அன்று
பறவைகளின் எச்சங்களால் மரங்கள் செழித்தன
இன்று
விதைகளை உருட்டி எரிந்தாலும்
மண்ணை தொடுவதில்லை
பிளாஸ்டிக் பைகளால் ..
பருவ மழை பொய்த்தது
பருவம் தப்பி மழை பொழிந்தாலும்
பூமியை நனைக்காமல்
வழிந்தோடி கடலில் கலக்கிறது
பிளாஸ்டிக் பைகளால் .
கடலும் மூடப்பட்டது பிளாஸ்டிக் பைகளால்..
பசுமை மறைந்தது
நீர்வளம் வற்றியது
வறண்டது பூமி
அந்நியரை விரட்ட
விடுதலை வேட்கை கொண்டோம் அன்று
இன்று நம் பிடியில் சிக்கி தவிக்கிறது இந்தியா
என் நாடு என் மக்கள் என்ற
உரிமை வேட்கை கொள்வோம்
சுத்தத்தை வீட்டில் இருந்து துவங்குவோம்
நம் நாடு தூய்மை அடையட்டும்
மீண்டும் இயற்கையின் புது போர்வையால்
போர்த்துவோம் பூமித்தாயை ....