தலைப்பிட வார்த்தை இல்லை

#கிருக்கல்17

#தமிழினியன்

#தந்தை

எட்டு வைக்க
பாதமாக,
எட்டாத கனிகளை
பறிக்க,
தட்டிக்கொடுத்து
தன் தூக்கம் தொலைத்து,
விரல் கொடுத்து
நினைந்ததை அடைய,
சுதந்திரமே இல்லாத
மனித வாழ்வில்,
பறவைகளைப் போலே
பறக்க சிறகாகி,
அடிமனதில் உதித்த
சிந்தையை செதுக்கிய
உளியாகி,
இதுதான் வேண்டும்மென்ற
மனதுக்கு அதைவிட அதிகமாக செய்யும் மனமாகி
முள்குத்த கடிகிறது,
ஆனால் அன்பின் வலியால்
நஞ்சை அடிவயிற்றில்
சுமந்து அவள் கொடுத்த,
ஈடில்ல பொக்கிஷத்தை
இதயமாகவே உன்
உயிராகவே
உன்னுடன் சுமந்து,
என் வெற்றிதோல்வியாக
இருக்கும் என்உயிர்
அப்பாவிற்கு,
என் அடையாளம்
தோல்வி எல்லாம் உன்
பெயர் சொல்லும்,
தோல்விகள் தான் வெற்றியின் ஊற்றுக்கண் என்றாயே,
அதனாலே என் தோல்வியை சமர்பிக்க,
வெற்றியும் உமக்கே சொந்தம் தந்தையே.

இனிய தந்தையர் தினம்...!!

எழுதியவர் : தமிழினியன் (17-Jun-18, 7:50 pm)
சேர்த்தது : தமிழினியன்
பார்வை : 195

மேலே