தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

மறுபிறவி என்பதில் நம்பிக்கை இல்லை எனக்கு, எங்கே
மற்றவனுக்கு மகனாய் பிறந்துவிடுவேனோ என்ற பயத்தால்.
என் விழியில் கண்ணீர் வந்ததேதில்லை, உன்னால்
என் கனவிலும் கஷ்டத்தை பார்த்ததில்லை.

ஆயிரம்முறை என்னை நீ கடிந்துக்கொண்டாலும்
வலி வந்தது என்னமோ உன் இதயத்தில்தான்.
ஆயிரம் கோடிகள் கொட்டி கொடுத்தாலும்
உன் அரவனைப்புக்கு அது ஈடாகாதுதான்.

தாயோடு மணிக்கனகில் உறவாடுவோம் ஏனோ
தந்தையோடு நொடிப்பொழுதில் பேசி முடிப்போம்.
ஆல்பத்தில் அடக்கம் செய்யபட்ட நினைவுகளோடு
அழுது புலம்புவதில் அர்த்தமேதுமில்லை.
அவர் இருக்கம் போழுதே அணைத்து
ஆரத்தழுவிக் கொள்வதில் தவரேதுமில்லை.

- இரா. நிர்மல் குமார்

குடும்பத்திற்காக தன்னை தியாகம் செய்து கொண்டிருக்கும் அனைத்து தந்தைகளுக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

எழுதியவர் : இரா. நிர்மல் குமார் (18-Jun-18, 11:26 am)
சேர்த்தது : Nirmal Kumar
பார்வை : 1187

மேலே