பரிணாமத் தேய்வு

சந்திப்பிழையுடன் எழுதுவது
------சந்ததியின் உரிமை !
சந்திச்சிலையாக நிற்பது
------தலைவனுக்குக் கடமை !
பந்திக்கு முந்த்திச் சென்றால்
------பசித்த வயிற்றிற்குச் சாப்பாடு !
அந்தியில் ஆகாய நிலா பார்த்தல்
------சோம்பேறிக் காதலர் பொழுது போக்கு !
மந்தியில் பிறப்பெடுத்த மனிதன்
------புந்தியில் பிந்தல் பரிணாமத் தேய்வு !