தந்தை-என் தந்தை

பெற்ற தாய் பிள்ளைகள் மீது
அன்புமழைப பொழிவாள்
தந்தையோ பிள்ளைகளுக்கு
'இவன் யார்' என்ற கேள்விக்கு
விடைதருவான் முகவரி தந்து
இப்பிள்ளைகளுக்கு தந்தை
'தான்' என்று .......பின்னர் வளரும்
பருவத்தில் நல்லதெல்லாம் புகட்டும்
குருவாகி 'தந்தை சொல் மிக்க
மந்திரமில்லை என்ற வாக்கிற்கு ஏற்ப
சூத்திரங்கள் அத்தனையும் பிள்ளைகள்
மனதில் ஏற்றிடுவான் பாசுரத்தில்
அடித்த ஆணிபோல் .....ஐந்தில்
வளையாதது ஐம்பதில் வளையாது
என்பதற்கேற்ப ...............பின்னர்
தன தோளுக்குமீறி பிள்ளை
வளந்தபோதும் அவனைக் கண்போல்
பார்த்து வளர்ப்பான் அவனுடன்
தந்தையாய் மட்டுமின்றி, நல்ல
ஆசானாய், பிள்ளையின் நண்பனாவும்

என் தந்தையிடம் இவ்வத்தனையும்
பெற்றடைந்த பாக்கியம் பெற்றேன் நான்
இன்று என் தந்தையை நினைத்து
பெருமைப் படுகின்றேன்..இப்படி
ஒரு தந்தையை எனக்களித்த அந்த
ஆண்டவனுக்கு நன்றி சொல்லி

தந்தையர் தினத்தில் இதை
கவிதையாய்த் தந்து என்
தந்தையை நினைக்கின்றேன்
ஆனந்த கண்ணீரால் காணா
அவர் பாதத்தை துடைத்து வணங்குகின்றேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jun-18, 4:56 pm)
பார்வை : 59

மேலே