நினைவுகளால் சிதைந்தேன்

ஏ(தடு)மாற்றமும்
நான் அவ்வபோது
சந்திக்கும்
நண்பர்கள்..
என்
கன்னத்தை தழுவி செல்லும்
விழிநீருக்கு மட்டுமே
தெரியும்..
நினைவுகளின் வலி
என்னவென்று...
வார்த்தைகள் கூட உலர்ந்து போனது...
வலி தரும் பல நினைவுகளால்..
ஆதலால் தான் மௌனமே
எனது மொழியாக கொண்டேன்...
மறக்க நினைத்தும் மறக்க முடியாமல்
தொலைந்து போனது
என் உள்ளம் மட்டும் அல்ல
வாழ்க்கையும் தான்..
செதில் செதிலாய்
சிதைந்து போன சில
நினைவுகளால்.....!!!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (19-Jun-18, 2:37 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 106

மேலே