அழகான அழகு

அழகுக்கே அழகியவள்...

அவள் உதிர்க்கும் உண்மைகள் அழகு...

அவள் பேசும் நாணயம் அழகு...

அவள் விதைக்கும் நம்பிக்கை அழகு...

அவள் கண்ணசைவின் மொழி அழகு...

பெருமையறியா அவள் நடைகள் அழகு...

பேணிக்காக்கும் அவள் நேர்மை அழகு...

விட்டுக்கொடுக்காத அவள் பாசம் அழகு...

பண்புமாறா அவள் குணங்கள் அழகு...

அவள் அழகின் அர்த்தமாயிருப்பதே அழகு...

எழுதியவர் : ஜான் (19-Jun-18, 8:03 pm)
Tanglish : azhagana alagu
பார்வை : 138

மேலே