வயக்காட்டுத் தென்றல்

#முதல்_முயற்சி

#ஓடக்கரை

#கிருக்கல்18

#வயக்காட்டுத்_தென்றல்

ஓடக்கரையோரம்..
ஓடக்கரையோரம்
ஒன்ன நானும் பாக்கயிலே,
வாட காத்தப் போல
வாரி என்ன
அணைக்கிறயே பொன்னம்மா..
அடியேன் கண்ணம்மா..

ஓடக்கரையோரம்
நாத்து நடும் வேளையில,
வண்ண நாத்து கூட
மாண்டு மடிஞ்சி போகுமடி பொன்னம்மா..
அடியேன் கண்ணம்மா..

ஓடக் கரையோரம்..
ஓடக் கரையோரம்
ஒருத்தி மட்டும் போகயில..
ஒளியும் நத்தகூட ஓன் பாதம் சேருமடி பொன்னம்மா..
அடியேன் கண்ணம்மா..

ஓடக்கரையோரம் ஓன்
கொலுசு சத்தம் கேட்கயில..
வண்ணக் குயிலு கூட
எசயெடுத்துப் பாடுமடி
பொன்னம்மா..
அடியேன் கண்ணம்மா..

ஓடக்கரையோரம்...
ஓடக்கரையோரம்
வளைஞ்சி நெளிஞ்சி போறவளே..
ஊரும் பாம்புகூட
ஓன் மார்ப சேருமடி
பொன்னம்மா..
அடியேன் கண்ணம்மா..

ஓடக்கரையோரம் ஒதட்டோரம் சிரிச்சவளே,
சிரிச்ச மனசக்கொஞ்ச தந்துப்புட்டு
போயேண்டி தாரமா..
மாமானுக்குத் தாரமா...
வாயேண்டி பாரமா..

எழுதியவர் : தமிழினியன் (19-Jun-18, 9:52 pm)
பார்வை : 60

மேலே