தலஹேன கொலை வழக்கு
கொழும்புக்கு வடக்கே, சர்வதேச விமமானநிலயத்துக்கு அருகே உள்ள நகரம் நீர்கொழும்பு. இந்த நகரில் இருந்து தேற்கே நீர்கொழும்பு ஏரிக்கும், இந்திய பெரும் கடலுக்கு இடையே உள்ள நிலப் பரப்பைக் கொண்டுள்ள பகுதியில் 3 மைல் தூரத்தில், தெற்கே அமைந்துள்ள ஊர் தலஹேன. அந்த ஊரில் வாழ்பவர்கள் பெருபாலும் கத்தோலிக்கர்கள். பரவர்கள் . கரையோர வாசிகள் என்ற படியால் அநேகர் மீன் பிடி தொழிலை நம்பி வாழ்பவர்கள் போர்த்துகேயர் ஆட்சி காலத்தில் கரையோர மக்கள் மதம் மாறியவர்கள். அதனால் அவர்களின் பெயர்களில் போர்துக்கேய பெயர் வாசனை வீசுகிறது. இந்தக் கிராமத்தில் பல கத்தோலிக்க தேவாலயங்கள் உண்டு பிற்றிப்பான கிராமம் இக்கிராமத்தில் இருந்து நீர்கொழும்பு நோக்கி கரையோரமாக ஒரு மைல் தூரத்தில் உள்ளது.
தலஹேன கிராமத்தில் மிகுவேல முதலாளியை தெரியாதவர்கள் இல்லை. அவருக்கு அந்த கிராமத்தில் மூன்று வீடுகள், நீர்கொழும்பில் ஒரு கடை, கொச்சிக் கடையில் இருபது ஏக்கரில் தென்னம் தோட்டம்,அதோடு பணக்காரனுக்கு உள்ள மிடுக்கு. அவருக்கு ஊரில் நண்பர்கள் குறைவு. அவரின் அண்ணன் தான் அந்த ஊர்விதானை . அரசியல் செல்வாக்கும் மிகுவேல் முதலாளிக்கு உண்டு அந்த கிராமத்தில் உள்ள கடற்கரைக்கு அருகே உள்ள வீடுகளில் அவரின் ஐந்து அறைகள், இரு பெரிய ஹால்கள் , இரு விறாந்தைகளும் முன்னுக்கும் பின்னுக்கும் தொட்டங்கள் உள்ள அவரின் வீடு தான் மிகப் பெரியது.
1907 இல் அப்புஹாமி என்ற மிகுவெல முதலாளி . டொன இகுயேனா ஹாமினே என்பவளை மணந்தார். அவளை ஊரில் லொக்கு நோனா என்று கூப்பிடுவார்கள். உருவத்தில் பெரிய தோற்றம். மிகுவெல தம்பதிகளுக்கு 7 வயதில் மகன் உண்டு லொக்கு நோனாவுக்கு 23 வயதில் டொனா ஜோசெப்பின் ஹாமினே என்ற தங்கை உண்டு அவளை புஞ்சி நோனா என்று கூப்பிடுவார்கள். அவ ளுக்கு, இனத்தவர்களில் ஒருவனான டொன் கிரிகோரிசுக்கு திருமணம் நிட்சயமாகி இருந்தது
லோக்கு நோனாவின் வீட்டில் மூன்று இளம் வயது பெண்களும், நான்கு ஆண்களும் வேலைக்கு இருந்தனர். பெண்களில் 18 வயது கரோலினா, 14 வயது ஜேன், சமையல்காரியாக 8 மாதங்களுக்கு முன்சேர்ந்த அனாமரியா ஆகியோர் இருந்தனர் . வேலைக்காரர்களில் பெரகரின்னு என்பவன் வீடு தளப்டங்களை கவனித்துக் கொண்டான். டானியல் என்பவன் கடைகளுக்குப் போய் சாமான்கள் வாங்கி வருவான். அபிலிங்கு என்பவன் வீட்டுக்காரர்கள் பொய் வருவதுக்கு மாட்டு வண்டில். ஒட்டினான். 14 வயது கைத்தான் என்பவன் வீடு வேலைகள் செய்தான். வீடு நிரம்ப வேலைக்காரர்கள். அவர்களை லொக்கு நோனா அடிமைகள் போல் நடத்தினாள். அவள் கண்டிப்பானவள். கோபக்காரி . சொன்னதை வேலைகாரர் செய்யத் தவறினால் தடியால் அடியும் போடுவாள். சில சமயம் உண்ணவும் கொடுக்க மாட்டாள். அவர்களோடு வீட்டுக்கு வெளியே சைமன். கப்ரியல் அகிய இருவரும் வெளியில் இருந்து அடிபிடி வேலைகள் செய்து வந்தனர்
கரோலினாஆறுவயதில் வெளிகம்பிடியாவில் உள்ள ஏழைக் குடும்பத்தில் இருந்து ஆறு வயதில் வேலைக்காரியாக வந்து சேர்ந்தவள் .
மிகுவெல குடும்பம் நீர்கொழும்புக்கு லீவில் இரு வாரங்கள் சென்ற போது வீட்டை கவனிப்பது வேலைக்காரிகளின் பொறுப்பு. நீர்கொழும்பில் இருந்து புஞ்சி நோனா திரும்பியபோது அவளின் வயிறு பெருத்திருப்பதைக் கண்ட கரோலினா, புஞ்சி நோனான கற்பிணி என நினைத்து ஊரில் கதை பரப்பினால். அதைக் கேள்விப்பட்ட லோக்கு நோனா கரோலினாவை கூப்பிட்டு. “ நீ தேவை இல்லாமல் பொய் வந்தந்தியை பரப்பாதே”என்று கோபத்தோடு பேசி அடித்தாள். அதன் பின் கரோலினா மீது லொக்கு நோனாவுக்கும், புஞ்சி நோனாவுக்கும் வெறுப்பு ஏற்பட்டது . அவள் செய்த சிறு தவறுகளுக்கேல்லாம் அவள் மேல் கோபித்து அடித்தாள்.
ஜேனின் சாட்சியத்தின் படி ஜூலை 31 ஆம் திகதி பகல் 2 மானிக்கு லோகு நோனாவாளும். புஞ்சி நோனாவாளும் கைததான் கரோலினாவின் வாயை அடைக்க கத்தியால் வெட்டி கொலை செய்யபட்டாள்
அன்றைய தினம் மிகுவெல வீட்டில் பெரிய பார்டி. எல்லோரும் அளவுக்கு மீறி குடித்தார்கள். மிகுவெலவும் அவரின் விதானையாராக இருக்கும் அண்ணனும் வாயில் ஒரு சுருட்டை பற்ற வைத்த படியே விறாந்ததையயில் போய் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள் . லொககு நோன்னவும் புஞ்சி நூனவும் குடியினால் தமது நிலைதடுமாறி பேசிய படி ஹாலில் இருந்தார்கள் . ஏதோ என்னதில் கரோலினாவின் பழி தீர்க்க இருவரும் எண்ணினார்கள் . கரோலினா குசினியில் சாப்பிட்டு கொண்டு இருந்த போது
லொக்கு நோனா உரத்த குரலில் “ எடியேய் கரோலினா இங்கை வா உன்னோடு ஓன்று பேசவேண்டி இருக்கு ” என்றாள்.
”லோகு நோனா நான் சாப்பிட்டுக் கொண்டிருகிறேன்” என்று கரோலினாவிடம் இருந்து பதில் வந்தது.
தான் கூப்பிட்டவுடன் கரோலினா வராதது லொக்கு நோனா மேலும் கோபத்தை கொடுத்தது
“ அக்கா பார்த்தாயா அவளின் அகங்காரத்தை . நீ கூப்பிட்டும் வரவில்லை”, லொக்கு நோனாவுக்கு தூபம் போட்டாள் புஞ்சி நோனா . ஜேனை கூப்பிட்டு கரோலினாவை போய் கூட்டி வரும்படி லோகு நோனா கோபத்தோடு சொன்னாள். ஜேன் குசினிக்குப் போய் கரோலினாவை லோகு நனா உடனே வரும்படி சொன்னதைகச் சொல்லியபோது. அதற்கு அவள் “நான் தட்டுகளை கழுவுகிரேமன் வேலை முடிந்ததும் வருகிறேன் என்று போய் சொல் “என்று ஜேனிடம் சொல்லி அனுப்பினாள் கரோலினா. ஜேன் அதைப் போய் லொக்கு நோனாவுக்கு சொன்னபோது அவளுக்கு கோபம் மூக்குமேல் வந்தது .தன் கட்டளையை அவள் அசட்டை செய்வது போல் லொக்கு நோனாவுக்கு இருந்தது
மூன்றம் தடவை” அவளை உடனே பொய் இழுத்து வா : என்று ஜேனுக்கு கட்டளை இட்டாள் லொக்கு நோனா.
அவள் குசினுக்கு போய் கரோலினாவை ஜேன் கூட்டி வந்தாள்.
குசினியல் இருந்து போகும் போது சமையல்காரியிடம் “லொக்கு நோனா என்னை கொல்ல கூப்பிடுகிறாள்” என்று சொல்லியபடி லொக்கு நோனாவிடம் பயத்தோடு கரோலினா சென்றாள்.
அவள் லொக்கு நோனாவும் புஞ்சி நோனாவும் இருந்த ஹாலுக்குள் போனதும் அவளது கையில் இருந்த கை விளக்கை அனைத்து, கரோலினாவின் முகத்தில் ஓங்கி அறைந்து “ எடியே நான் கூபிட்டால் உடனே உனக்கு வரத் தெரியாதா “? என்று கையில் இருந்த தடியால் அடித்தாள். தான் வரத் தாமதித்துக்கு கரோலினா காரணம் சொன்ன போது மது அருந்திய வெறியில் ஜேனிடம் குசினிக்கு போய் பெரிய கத்தி ஒன்றை சமையல் அறையில் இருந்து இருந்து எடுத்து வரும் படி லொக்கு நோனா சொன்னாள். ஜேனும் பயத்தில் லொக்கு நோனா சொன்னபடி ஒரு குசுனியில் இருந்து கத்தியை கொண்டு வந்து புஞ்சி நோனாவிடம் கொடுத்தாள். லொக்கு நோனா கரோலினாவின் தலை மயிரினை பிடித்தபடி அவளின் தலையில் ஓங்கி பொல்லினால் லொக்கு நோனா அடித்தாள் தன் தங்கையிடம் “ இவளின் கழுத்தை வெட்டு” என்றாள். கரோலினா அய்யோ அம்மா என்று கதறியகாத்தான் என்ற வேலைக்கார சிறுவனை வந்து அவளின் வாயை பொத்தும்படி லொக்கு நோனா சொன்னாள். அவனும் அதன் படி செய்யும் பொது புஞ்சி நோனா கரோலினாவின் உடலின் பால் படுதிகளில் கதியால் வெடி கழுத்திலும் காயம் ஏற்படுதினாள். கரோலினா மூர்ச்சித்து விழுந்தாள். சத்தம் கெட்டி விரனதியில் இருந்த மிகுவெலவும் அண்ணனும் ஹாலுக்கு ஒட்டி வந்தகார். குற்றுயிராக நிலத்தில் இரத்தம் ஓட கிடந்த கரோலினாவை கண்டு அவள் இறந்து விட்டாள் எனத் தீர்மானித்து அவளின் உடலை புதைப்பது நல்லது என மிகுவெலவின் விதானையார் அண்ணன் யோசனை சொன்னார் . அதிலும் பார்க்க கேப்ரியல் சைமன் ஆகிய எடுபிடி காரர்களின் உதவியோடு உடலை பக்கத்தில் உள்ள கடலில் வீசுவது தான் நல்லது என மிகுவெல சொன்னான். உடனே அவர்கள் சொன்னபடி வேலைகாரன் கைத்தான் கேப்ரிலையும் சைமனையும் கூட்டி வந்தான் . இரவோடு இரவாக குற்றுயிராக இருந்த கரோலினாவின் உடல் கடலில் வீசப் பட்டது. . இரத்தம் படிந்த ஹாலின் நிலம் தண்ணீரால் கழுவப் பட்டது .
***
மறு நாள் காலை கரோலினாவின் உடல் பக்கத்து பிற்றிப்பான கிராமத்தின் கடற்கரையில் மாலை எழு மணியாளவில் உடல் ஊதியபடி ஒதுங்கியது. கிராம வாசிகள் உடனே பொலீசுக்கு அறிவித்தார்கள் . அவர்களுக்குத் தெரியும் அந்த உடல் மிகுவெல முதலாளி வீட்டில் வேலை செய்த வேலைக்காரியின் உடல் என்று.அதனால் உடனே மிகுவெலவுக்கு அறிவித்தார்கள் அவர் செய்தி கேட்டு அவ்வளவு அக்கறை காட்டவும் இல்லை. உடல் இருந்த கிராமத்துகுப் போகவும் இல்லை
பொலீசம் வைத்திய அதிகாரியும் வந்து விசாரணையை ஆரம்பித்தார்கள் . பிரேத பரிசோதனையின் போது உடலில் 17
வெட்டுக்காயங்கள் உண்டு என்பதை டாக்டர் கண்டார் . பிற்றிப்பான ஊர்வசிகள் மிகுவேல குடும்பத்தின் மேல் இந்த மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளது என்று பொலீசுக்கு சொன்னார்கள். பிற்பகல் 1.30 மணிக்கு மிகுவெல முதலாளியின் வீட்டுக்கு சென்று விசாரணையை தொடர்ந்தது. மிகுவேல குடும்பம்
கரோலினாவை மூன்று நாட்களாக வீட்டில் இருந்து காணவில்லை என்று சொன்னார்கள். பிற்றிப்பான கிராம வாசிகள் காலையே உடலை கண்டவுடன் தங்களுக்கு அறிவித்ததை போலிசுக்கு சொல்வில்லை. அதனால் அவர்கள் மேல் போலிசுக்கு மேலும் சந்தேகம், வலுத்தது. அதோடு ஊர்வாசிகள் மிகுவெல மனைவி லொக்கு நோனாவும் அவளின் தங்கை புஞ்சி நோனாவும் வேலைகாரர்களை துன்புறுத்தியதை பற்றி விபரம் சொன்னார்கள். சிறு தவறுகள் செய்தலும் தடியால் அடித்து தண்டனை கொடுப்பதை லொக்கு நோனாவும் அவளின் தங்கை புஞ்சி நோனாவும் வழக்கமாகக் கொண்டவர்கள். மிகுவெல முதலாளி அவர்களின் நடவடிக்கையில் தலையிடுவதில்லை.
தீவீர விசாரணையின் பின் மிகுவெல அப்புகாமி, லொக்கு நோனா, புஞ்சி நோனா, கைத்தான், ப்ரிகிரின்னு, சைமன். கேப்ரியல். மிகுவெலவின் அண்ணன் பாவுலு விதானை ஆகிய எட்டு பேரின் மேல் கரோலினாவை கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது
***
1907 ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி ஆங்கிலம் பேசும் நீதிபதியும் 7 ஜூரிமார் முன்னிலையில் ஆரம்பித்து நவம்பர் 22 இல் முடிந்தது. அப்போது குற்றவாளிகளுக்கு ஆஜரான வக்கீல் எதற்காக கத்தியை கொண்டு வந்து லோக்கு நோனாவிடம் கொடுத்த ஜேனை என் அரசு குற்றவாளியாக கருதவில்லை என கேட்டார் . அதற்கு ஜேனுக்கு கொலை செய்யும் நோக்கம் இருக்கவில்லை என்றும், பயத்தில் லோக்கு நோனா சொன்னதை அவள் செய்தாள் என்று விளக்கம் அரசு கொடுத்தது. எதற்கு கத்தியை லோக்கு நோனா கேட்கிறாள் என்று தெரிந்திருந்தால் தான் கத்தியை கொண்டு வந்து கொடுதிருக்கமாட்டேன் என்று ஜேன் வாக்கு மூலத்தின் போது சொன்னாள். வழக்கு விசாரணையின் முடிவில் 7 ஜூரி மார்களில் 6 பேர் லோகு நோனா, புஞ்சி நோனா, கைத்தான், ப்ரிகிரின்னு ஆகிய நால்வருக்கும் கொலை குற்றவாளிகள் என தீர்ப்பு சொன்னதால் அவர்களுக்கு மரணதண்டனை கிடைத்தது. தீர்ப்பின் போது மரணதண்டனைக்கு எதிராக ஆப்பீல் செய்தால் சில வேளை ஆயுள் தண்டனையாக மாற்ற முடியுமென நீதிபதி தீர்ப்பில் சொன்னார். சுப்ரீம கோர்ட்டுக்கு அப்பீல் செய்ததில் நால்வருக்கும் இருபது வருட ஆயுள் தண்டனை கிடைத்தது . இந்த கொலைக்குப்பின் பின் மிகுவெல குடும்பதில் இருந்த செல்வதை வழக்கில் செலவு செய்து ஓட்டாண்டியானார் . ஊர்வாசிகள் அந்த குடும்பத்தோடு பேசுவதை நிறுத்தினார்கள் .
****