தமிழ்

தமிழ் என்னும் ஆதிமொழி...
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்த மொழி...
கணக்கிட முடியா பதிவுகளால் வரலாறான மொழி...
அறிஞர்கள் பலரும் போற்றிப் பாதுகாத்த மொழி...
இசைகளில் புகுந்து வையம் பரவின மொழி...
நாடகத்துறையில் நவரசம் காட்டின மொழி...
நூல்கள் பலவற்றால் ஆராய்ச்சிகளை பதிவிட்ட மொழி...
நுட்பமான பதிவுகளால் ஆச்சரியம் பொதிந்த மொழி...
விரும்பும் எவரையும் வசீகரிக்கும் ஆற்றலுள்ள மொழி...
தாயன்போடு தரணி முழுவதும் பரவிக்கிடக்கும் மொழி...
ஒரு அர்த்தத்திற்கு ஆயிரம் வார்த்தைகள் சொல்லிகொடுக்கும் மொழி...