சிறைச் சுதந்திரம்

#கிறுக்கல்18

#தமிழினியன்

#சிறைச்_சுதந்திரம்

என் கண்களுக்கு
நானே அருவருப்பாக
தெரிகிறேன் உணர்கிறேன்,
உறங்கும்போது விடியலைத்தேடும்
நிலவுகளின் மத்தியில்,
நாளை என்ற தினத்தை எண்ணி
உறங்காமல் முக்கால்
சுவரில் முட்டுகிறேன்,
கடந்து செல்லும் சாலைகளில்
எந்த சூரியனும் நிலவும்
சுடுமோ தொடுமோ,
என நானே இழிந்து
கொள்கிறேன்
ஏன் இவ்வுலகில்
பிறந்தேன் என்று,
பிறப்புக்கு அடையாளமாக
ஒருத்தி இருக்கிறாள்,
அவளுக்கு அடையாளமாக
ஒருவன் இருக்கிறான்,
ஆனால் சுதந்திரத்திற்கு
அடையாளமாக சுற்றம் எங்கே?
இச்சையான எச்யெண்ணங்கள்
கொண்டு சுற்றுகிறது!
தன் உறவின் உள்ளத்திலும்
சுதந்திரம் இல்லாமல்
சுருண்டு உறங்கும் என்பது மறந்து,
ஆடு மாடுகளுக்கு கூட
சுதந்திரம் இல்லை இங்கு,
மனிதியாக பிறந்த எனக்கு
இன்பம் ஒன்றுண்டோ!
ஏன் என்னைப் படைத்தாய்
பிரம்மனே?
ஏன் என்னை கருஞ்சிறையில்
இருந்து விடுவித்தாய் அன்னையே,
ஏன் நான் உருவாக
காரணமானாய் தந்தையே,
சிறையில் நான் இருந்தாலும்
என் எண்ணத்தை நிறைவேற்றி
இன்பம் உணர்ந்த அன்னையும்,
இங்கே என் நிலைகண்டு
உறங்கவில்லை,
பிறப்புணர்ந்து என் முதல்
அழுகையை இசையாக
உணர்ந்து,
நகைத்தவளும் இங்கே
அழத்தான் செய்கிறாள்,
ஆதிக்கம் நிறைந்த இருளில்
அல்லல்படும் பேதையாகி,
சுமைகளை மட்டுமே
சுமக்கும் கோழையாக
வாழத்தான் நான் பிறந்தேனா,
அடக்கம் இல்லாத ஆண்களின்
மத்தியில் உடையுடுத்தியும்,
நிர்வாணமாக உணரும்
அவர்கள் கண்களின் ஒளி,
ஓர் அன்னையின் வலியென
உணர்வாரில்லை இங்கு,
உதிரும் இலைகளைப் போலே
பிறப்புக்கு அடையாளமான
நாங்கள் இங்கே உதிர்ந்துகொண்டு
தான் இருக்கிறோம்,
வலியுணர்ந்தாலும் நீ உதிர்ந்த
நாளை எண்ணி
நகையோடு வலி மறந்தவளை,
காலத்தின் அவலநிலையை நீயே
ஏற்படுத்தி புதைக்காதீர்கள்,
சிதைந்த எங்கள் எண்ணங்களைச்
செதுக்கி சுதந்திரப் பறவையாக்குங்கள்!!

அண்ணனே தம்பியே மாமாவே மச்சினனே
சித்தப்பாவே பெரியப்பாவே தந்தையே
தாத்தாவே..!!

எழுதியவர் : தமிழினியன் (20-Jun-18, 1:45 pm)
சேர்த்தது : தமிழினியன்
பார்வை : 45

மேலே