அன்பின் வழியில் வாழ்க்கை

இரவில் கண்ட இத்தனை கனவுகள்
காலையில் எழுந்ததும் கலைந்து போகலாம்...!
மனதில் கொஞ்சம் உறுதி இருந்தால்,
முயற்சி செய்து முன்னேற பார்க்கலாம்...
நினைத்து பார்க்க நேரமிருந்தால்,
நிலையான நட்பை கொண்டிருக்கலாம்,
காலத்தை கருத்தில் கொண்டிருந்தால்
காரணங்கள் சொல்வதை தவிர்க்கலாம்...
நேசிப்பதை கொஞ்சம் குறைத்திருந்தால்,
அதைப்பற்றி யோசிப்பதை விட்டுவிடலாம்.
புரிந்துகொண்டு நடந்து கொண்டால்,
பல பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம்...
அதிகம் உள்ள அன்பை காட்ட,
அனுபவம் என்பது ஏதும் உண்டோ?
அறிந்து கொண்டு நீயும் வாழ்ந்தால்,
அதைவிட இனிமையான வாழ்க்கை உண்டோ!!!

எழுதியவர் : தப்ரெஷ் சையத் (20-Jun-18, 1:42 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
பார்வை : 1383

மேலே