ஐபி அட்ரஸ் என்றால் என்ன

ஐ பி அட்ரஸ் என்பது முழு விளக்கம் இன்டர் நெட் ப்ரோடோகால் அட்ரஸ் ஆகும். நமக்கு இதுவரை தெரிந்தது புரோட்டா மட்டும் தான். இப்போது புரோட்டோகால் அட்ரஸ் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

ஒரு கருவி மற்றொரு கருவியுடன் தொடர்பு கொள்ள ஐ.பி அட்ரஸ் பயன் படுகிறது. குறிப்பாக இணையதள இணைப்பிற்கு.

பெரும்பாலான ஐ.பி அட்ரஸ் இது போன்று இருக்கும் 151.101.65.121 சிலவை வேறு மாதிரியும் இருக்கும். ஆனால் எல்லா ஐ.பி அட்ரசும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு கணினியும் வெவேறு ஐ.பி அட்ரஸ் கொண்டு இருக்கும்.

உதாரணமாக ஒரே வீட்டுக்குள்ள ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு பெயர் இருக்கும். அவ்வாறு இருப்பதுதான் நல்லது. எல்லருக்கும் ஒரே பெயர் இருந்தால் இந்த உலகத்தில் பல்வேறு குழப்பம் நிகழ்ந்து இருக்கும். எல்லாருக்கும் ஒரே பெயர் இருந்தால் கொஞ்சம் கற்பனை பண்ணி தான் பாருங்களேன்.

ஐ.பி அட்ரஸ் பயன்பாடுகள் :

நான் முன்னே குறிப்பிட்டது போல ஒவ்வொரு தனி மனிதனை அடையாளம் காண பெயர் மற்றும் முகவரி இருப்பது போல, ஒவ்வொரு கனியையும் அடையாளம் காண/ தொடர்பு கொள்ள பயன் படுவது ஐ.பி அட்ரஸ் ஆகும்.

உங்களுக்கு முன் பின் அறிமுகமில்லாத / உங்களுக்கு நெருக்கமில்லாதவர்களிடம், உங்களுடைய பெயர் முகவரி விபரங்களை எப்படி கொடுக்க மாடீர்களோ அப்படிதான் உங்களுடைய ஐ.பி அட்ரஸ் என்பது மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டியது மிக அவசியம் ஆகும். ஒரு வேலை மூன்றாம் நபருக்கு தெரிந்தால் ஒரு வேலை அவர் ஹேக்கராக இருந்தால் உங்கள் கணினியையும், அதிலிருக்கும் முக்கிய சமாச்சாரங்களை நீங்கள் மறக்க வேண்டியதுதான்.

நான் ஒரு இணைய தளத்தின் பெயரை பிரவுசரில் டைப் செய்கிறேன் சிபேர்க்காவலன் நான் டைப் செய்த வெப் சைட்டின் பெயரை பிரவுசர் டி.என் எஸ் (domain name system ) சர்வரில் தேடும். ஒவ்வொரு இணையதளமும் ஒரு ஐ.பி அட்ரஸை கொண்டிருக்கும் யாரும் அதனை நம்பர்களை நினைவில் வைக்க முடியாது என்பதற்காக அந்த ஐ.பி அட்ரஸ் ஒரு பெயரைக் கொண்டுள்ளது.

ஐ.பி அட்ராசின் வகைகள்

நம்மில் சிலர் இதற்க்கு முன்னரே ஐ.பி அட்ரஸ் பற்றி கோபி பட்டிருந்தாலும் ஐ.பி அட்ராசின் வகைகள் பற்றி அறிய வாய்ப்பில்லை. private IP addresses, public IP addresses, static IP addresses, and dynamic IP அட்ட்ரஸ்ஸ் என வகைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்திற்காக பயன் படுகிறது.

பிரைவேட் ஐ.பி அட்ரஸ் என்பது நமது வீட்டிற்குள் பயன்படுவதாகும், உங்களது ரௌட்டருக்கும் கணினிக்கும் இடையே தொடர்பு கொள்ள பயன் படுகிறது. இந்த பிரைவேட் ஐ.பி அட்ரஸ் நாமாகவும் அமைக்கலாம் அல்லது ரௌட்டரில் தானாகவே அமைந்திருக்கலாம்.

பப்ளிக் ஐ.பி அட்ரஸ் என்பது வெளி உலகோடு தொடர்பு கொள்ள பயன் படுகிறது. இந்த பப்ளிக் ஐ.பி அட்ரஸ் என்பது உங்களது Internet Service Provider (ISP) யால் வழங்கப் படுகிறது. பப்ளிக் ஐ.பி அட்ரஸ் கொண்டுதான் நீங்கள் இணைய தளம் பயன் படுத்தி வெளி உலகை தொடர்பு கொள்ள முடிகிறது.

பிரைவேட் மற்றும் பப்ளிக் ஐ பி அட்ரஸ் இவை இரண்டுமே மாறக்கூடியது அல்லது மாற்றாக கூடியது ஆகும். எளிதாக சொன்னால் நிலையானது அல்ல.

உங்கள் கணினியின் ஐ.பி அட்ரஸ் தெரிந்து கொள்ளும் முறை:

ஐ.பி அட்ரஸ் தெறித்து கொள்ள ஒவ்வொரு இயங்கு தளமும் ஒவ்வொரு முறை. உங்களது பிரைவேட் ஐ பி அட்ரஸ் விண்டோஸில் தெரிந்து கொள்ள. command prompt சென்று ipconfig/all என்று டைப் செய்தால் உங்கள் கணினியில் உள்ள ஐ பி அட்ரஸ் சம்பந்தமான அனைத்து தகவலும் கிடைக்கும்.

மேக் ஓ.எஸ் க்கு : System Preferences -> Network -> இந்த ஆப்ஷனிக்குள் status கீழே உங்களது ஐ.பி அட்ரஸ் இருக்கும்.
காலி லினக்ஸ் அல்லது உபுண்டு ஓ. எஸ் க்கு டெர்மினல் சென்று ifconfig என்று டைப் செய்தால் உங்கள் ஐ.பி அட்ரஸ் இருக்கும்.

உங்களது பப்ளிக் அட்ரஸ் தெரிந்து கொள்ள உங்கள் பிரவுசாருக்கு சென்று what is my ip என்று டைப் செய்தால் உங்களது பப்ளிக் ஐ.பி அட்ரஸ் தெரிந்து விடும்.

பெரும்பாலான ரவுட்டரின் ஐ பி அட்ரஸ் 192.168.1.1 ஆகும் சிலவை சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.

ஐ.பி அட்ரஸ் வெர்சன்கள் (Internet Protocol version):

IPv4 vs IPv6 என இரண்டு வெர்சன்கள் ஆகும். இதில் IPv4 என்பது பழைய வெர்சன் ஆகும் IPv6 என்பது புதியது ஆகும்.

IPv4 யிலிருந்து IPv6 அறிமுகமானதன் காரணம் பழைய வெர்சனை விட புதிய வெர்சனைக் கொண்டு அதிக இணைப்புகளை பெற முடியும். IPv4 வெர்சனைக் கொண்டு 4 பில்லியன் இணைப்புகள் மட்டுமே பெற முடியும். இந்த தொழில் நுட்ப புரட்சி உலகில் 4 பில்லியன் இணைப்புகள் என்பது மிக குறைவு ஆகும். எனவே தான் IPv6 வெர்சன் அறிமுகமாகி உள்ளது இந்த புதிய வெர்சனைக் கொடு என்ன முடியாத அளவு இணைப்புகளை பெற முடியும். இவ்வளவு இணைப்புகள் இன்றைய காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் மிக அவசியமாகும்.

எழுதியவர் : ஹாஜா (21-Jun-18, 5:17 pm)
சேர்த்தது : ஹாஜா
பார்வை : 235

சிறந்த கட்டுரைகள்

மேலே