சூத்திர மொழியாக, கோவிலுக்கு வெளியே அவமதிக்கப்பட்டு நிறுத்தப்படும் தமிழ் மொழி

அன்று அம்பலத்தில் தமிழில் திருவாசகம் பாட போராடிய ஆறுமுகச்சாமி என்ற ஓதுவாருக்கு, துணை நின்று போராடியது கடவுள் நம்பிக்கையே இல்லாத, திராவிட கழகத்தார்களும், வி.வி.மு, ம.க.இ.க, போன்ற இயக்கங்கள் தான், எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை தான், இருந்தும் நாங்கள் ஏன் ஆறுமுகசாமிக்கு உதவ வேண்டும்? அவருக்காக போராட வேண்டும், இங்கு அவருக்காக போராட வேண்டியவர்களான, சைவத்தையும் , சிவனையும் பற்றி வாய் கிழிய பேசும் தமிழ் ஹிந்துக்கள் என்ற அடையாளத்தோடு அலையும், ஆத்திகவாதிகள் , ஆறுமுகச்சாமிக்கு குரல் கொடுக்காதது ஏன் ? இந்த இடத்தில் தான் இப்படிப்பட்டவர்களின் முகத்திரை தானே கிழிக்கப்படுகிறது, ஆன்மீகத்தில் தமிழும் சமஸ்கிரதமும் இரு கண்கள் என வாய் கிழிய பேசிவிட்டு, ஆறுமுகசாமி போன்றோர் மூலம் பிரச்சனை வரும்பொழுது, அவர்களிடம் இருக்கும் உண்மையான சம்ஸ்கிருத விசுவாசமும், பார்ப்பன பக்தியும் தானாக வெளிப்படுகிறது, இவர்கள் அறிந்தே இந்த தவறை செய்கின்றனரா அல்லது ஹிந்துத்துவா அடிமையின் காரணமாக இப்படி செய்கின்றனரா? என்றால் இரண்டுமே என்பது தான் சரியாக இருக்கும், இவர்களிடம் ஆறுமுக சாமியை ஆதரிக்காததன் காரணத்தை கேட்டல், இவர்கள் சொல்லும் விளக்கம், இத்தனை நாட்களாக இவர்கள் தமிழையும், சமஸ்கிரதத்தையும் இரு கண்கள் என கூறிவந்தது பொய் என தானே நிரூபணம் ஆகிறது, அது என்னவென்றால் தமிழில் அர்ச்சனை என்ற வார்த்தையே கிடையாது, அப்படி இருக்கும்பொழுது ஆறுமுகச்சாமி தமிழில் திருவாசகம் பாடி அர்ச்சனை செய்ய முயல்வது தவறு, எனவே நாங்கள் அவரை எதிர்க்கிறோம் என்றனர். ஹிந்துக்களாக இருப்பதை பெருமையாக நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும், தமிழர்களே இந்த இடத்தில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், தமிழர்களுக்கு எப்படி கோவில் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையோ, அதே போல நம் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கும் வாசல் வரை தான் அனுமதி, கருவறைக்குள் அனுமதி இல்லை, அப்படி என்றால் தமிழர்கள் எப்படி சூத்திரர்களாக(வேசி மகன் ) தீண்டாமையில் தள்ளப்படுகிரோமோ அதே போல நம் மொழியும் சூத்திர மொழியாகவே கருதப்பட்டு அர்ச்சனை செய்யும் அளவிற்கு புனிதமான மொழி இல்லை என்று கோவிலுக்கு வெளியே அவமத்திக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது , நம் மொழியில் அர்ச்சனையை செய்வதை இழிவாக கருதும் ஹிந்து மதத்திற்கு ,நம் மொழியில் தேவாரமும் திருவாசகமும் எதற்கு, தமிழ் மொழிக்கே ஆலயப்ப்ரவேசம் செய்ய அனுமதி இல்லாத ஹிந்து மதத்திற்கு, தமிழ் ஹிந்துக்கள் எதற்கு, தேவாரத்தையும் திருவாசகத்தையும், குப்பையில் வீசுங்கள், நம் மொழியை சூத்திர பாஷையாக கருதும் ஹிந்து மதத்தை, துரத்தி அடியுங்கள், இனியும் இப்படி பட்டவர்களை நம்பி ஆன்மீகத்தில் இறங்கி, அவர்களைப்போன்று தமிழை தாரை வார்துக்கொடுத்துவிடாதீர்கள், தமிழர்களே.

எழுதியவர் : (21-Jun-18, 5:24 pm)
பார்வை : 70

சிறந்த கட்டுரைகள்

மேலே